எங்கள் வீரர்கள் மேல் சோதனை நடத்த முடியாது : பி.சி.சி.ஐ அதிரடி 1

ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்துவதை தடுப்பதற்காக உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 2008, 2012 ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரர்களின் மாதிரிகளை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அப்போது பெரும்பாலான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

எங்கள் வீரர்கள் மேல் சோதனை நடத்த முடியாது : பி.சி.சி.ஐ அதிரடி 2
Umesh Yadav of India celebrates the wicket of Kyle Abbott of South Africa during day five of the 4th Paytm Freedom Trophy Series Test Match between India and South Africa held at the Feroz Shah Kotla Stadium in Delhi, India on the 7th December

ஊக்கமருந்து உட்கொண்டு கலந்து கொள்வதால் திறமையான வீரர்களின் சாதனைகள் வீணடிக்கப்படுகிறது. இதனால் வாடா (World Anti-Doping Agency) தடகள போட்டியில் வெளிப்படைத் தன்மை மற்றும் வீரர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஊக்கமருந்து சோதனையை நடைமுறை நடத்தி வருகிறது.

இதேபோல் இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நியாயமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (NADA- National Anti-Doping Agency) செயல்பட்டு வருகிறது. அனைத்து வகை போட்டிகளிலும் பரிசோதனை நடத்தி வரும் நடா, கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் சோதனை நடத்தாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறுகின்ற கிரிக்கெட் போட்டி தொடரின்போது கலந்து கொள்ளும் வீரர்களுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.எங்கள் வீரர்கள் மேல் சோதனை நடத்த முடியாது : பி.சி.சி.ஐ அதிரடி 3

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கான நடா அமைப்பின் ஊக்க மருந்து எதிர்ப்பு மேல்முறையீட்டு குழுவின் (ADAP – Anti-Doping Appeal Panel) புதிய உறுப்பினர்களாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்தர் சேவாக்கும், முன்னாள் டெல்லி கிரிக்கெட் அணி வீரர் வினய் லம்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு சேர்த்து இந்த குழுவில் ஆறு உறுப்பினர்கள் உள்ளனர். மூத்த வழக்கறிஞர் விபா தத்தா மகிஜா, நவின் தங், ஹர்ஷ் மகாஜன், வீரேந்தர் சேவாக், வினய் லம்பா ஆகியோர் அடங்கிய இந்த குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் செயல்பட்டு வருகிறார்.

விளையாட்டு வீரர்கள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அந்த வதிமுறைக்கு உட்பட்டு வீரர்கள் செயல்பட வேண்டும். இல்லையெனில் தடைக்கு உள்ளாவார்கள்.எங்கள் வீரர்கள் மேல் சோதனை நடத்த முடியாது : பி.சி.சி.ஐ அதிரடி 4

இந்த அமைபின் விதிமுறைகளை அனைத்து நாடுகளும் கடைபிடித்து வருகிறது. இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (NADA) வீரர்களுக்கு பரிசோதனை செய்து வருகிறது. மல்யுத்தம், குத்துச்சண்டை உள்பட எல்லா விளையாட்டுக்களும் இதில் அடங்கியுள்ளது.

இந்த விதிமுறைக்குள் வரை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து வந்தது. ஆனால், இந்திய விளையாட்டுத்துறை இந்திய வீரர்களுக்கும் சோதனை நடத்த வேண்டும். இந்தியாவில் தொடர் நடைபெறும்போது வீரர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்தால், அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் கிரிக்கெட் ஒரு தேசிய விளையாட்டு பெடரேசன் கிடையாது. அது தன்னாட்சி அமைப்பு. உலகளவில் கிரிக்கெட்டை நிர்வகிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இணைந்து செயல்படுகிறது. நாடாவின் அதிகார வரம்பிற்குள் இது வராது. பிசிசிஐ-க்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஐ.சி.சி.தான் உருவாக்கி செயல்படுத்த முடியும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *