ஐபிஎல் போன்று புதிய விதமான 100 பந்து போட்டியை துவங்கப் போகும் பிசிசிஐ! ரசிகர்கள் செம குஷி! வீரர்கள் படு ஜாலி!
கிரிக்கெட் விளையாட்டை மேலும் மேலும் பிரபலப்படுத்துவதற்கும் உலகம் முழுவதும், உள்ள 200 நாடுகளில் கொண்டு சேர்ப்பதற்கும் வித்தியாசம் வித்தியாசமாக கிரிக்கெட் ஐடியாக்கள் உதித்துக் கொண்டே இருக்கின்றன. முதலில் டெஸ்ட் போட்டி விளையாடப்பட்டது. 10 நாட்களுக்கு விளையாடப்பட்ட டெஸ்ட் அதன் பின்னர் ஐந்து நாட்கள் என்று மாற்றப்பட்டது.
அதன் பின்னர் ஒருநாள் போட்டி என்று 60 ஓவர் போட்டியில் விளையாட பட்டது. அதுவும் அதிகமாக இருந்ததால் 50 ஓவர் போட்டியில் ஆக மாற்றப்பட்டு கடந்த 30 வருடங்களாக விளையாடப்பட்டு வருகிறது. ஒரு நாள் முழுவதும் ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து பார்க்கமாட்டார்கள், சோர்வடைந்து விடுவார்கள் என்ற அடிப்படையை உணர்ந்த கிரிக்கெட் அதிகாரிகள் 20 ஓவர் போட்டிகள் என்ற ஒரு புதிய விதமான கிரிக்கெட்டை கொண்டு வந்தனர்.
இது கிரிக்கெட்டில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. கடந்த 17 வருடங்களாக இதுதான் உலக கிரிக்கெட்டின் முகமாக இருக்கிறது. பெரிய நாடுகள் இதனை விரும்பாவிட்டாலும், சிறிய சிறிய நாடுகளில் இது தான் என்று கிரிக்கெட்டின் முகம். அதனையும் தாண்டி 100 பந்து கிரிக்கெட் என்ற ஒரு புதிய விதமான முயற்சியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.
கிரிக்கெட்டில் இருக்கிறது இந்த 100 பந்தை கிரிக்கெட்டில் மொத்தம் 16 ஓவர்கள் வீசப்படும். 15 ஓவர்கள் 6 பந்துக்களுடனும், கடைசி ஓவரும் மட்டும் 10 பந்துக்களுடன் வீசப்படும். இது போன்று பல விதிகள் எதில் இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதனை தொடங்கியிருக்கிறது. மேலும் இதே போன்ற ஒரு கிரிக்கெட் விளையாட்டை இந்தியாவும் துவங்க ஆர்வம் தெரிவித்து உள்ளதாக இந்திய கிரிக்கெட்டை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளா.ர் இதனை இங்கிலாந்து கிரிக்கட் அதிகாரிகள் உறுதி செய்துள்ளார் .இதன் காரணமாக மேலும் ஒரு கிரிக்கெட் தொடர் வரப்போகிறது என்று ரசிகர்களும், இதில் விளையாட போகும் வீரர்களும் ஜாலியாகி உள்ளனர் .