இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!! 1

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வரவிருக்கும் இலங்கை சுற்றுப்பயணத்திற்காக இரண்டு தனித்தனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், ஐ.சி.சி. மகளிர் சாம்பியன்ஷிப்பில் மூன்று ஒருநாள் மற்றும் ஒரு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி ஆட இருக்கிறது. மித்தாலி ராஜ் ஒருநாள் அணிக்கு கேப்டனாகவும், ஹர்மான்பிரீத் கவுர் டி20 அணிக்கு கேப்டனாகவும் இருக்க போகிறார்கள்.

இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!! 2

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பின்னர் ஒரு பெரிய ஈர்ப்பை அனைவரிடமும பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய போதிலும், அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தது. அப்போதிருந்து, பெண்கள் அணிக்கு சராசரியாக ஒரு இடம் கிடைத்தது, சமீபத்தில் பங்களாதேஷ் அணியிடம் ஆசிய கோப்பையை இழக்க நேரிட்டது.

வீரர்கள் உடன் கருத்து வேறுபாடு காரணமாக துஷார் ஆரோதெ பதவி விலகினார். முன்னாள் இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்  ரமேஷ்போவருக்கு புதிய பயிற்சியாளர் பொறுப்பை பி.சி.சி.ஐ. கொடுத்தது, இது அவரது முதல் பணியாகும்.

இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!! 3

சர்வதேச ஒருநாள் போட்டி அணியில் மூத்த வீரர்களான ஹர்மன்ப்ரீத் கவுர், ஜுலன் கோஸ்வாமி, மித்தலி ராஜ் ஆகியோரை கொண்டுள்ளது. கிருஷ் மந்தானா, ஹர்மன்ப்ரீத் கவுர் இருவரும் சமீபத்தில் கியா சூப்பர் லீக் போட்டியை முடித்துவிட்டு சமீபத்தில் தான் இங்கிலாந்தில் இருந்து திரும்பினார். ஹர்மான் மற்றும் மந்தானா ஆகியோர் பேட்டிங்கில் சில அற்புதமான வடிவங்களைக் காட்டியுள்ளனர், மேலும் இலங்கையில் அதே நிலையை தொடர விரும்புவார்கள்.

மறுபுறத்தில், அணிக்கு எப்படி தலைமை தாங்குவது என்பது தெரிந்த மிதலி ராஜ் சிறப்பாக வழிநடத்தை உள்ளார். அணியில் சில இளம் வீரர்கள் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள சிறப்பாக செயல்படவேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.

இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய பெண்கள் அணி அறிவிப்பு!! 4

செப்டெம்பர் 11 ம் தேதி கல்லெயில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்குகிறது, செப்டம்பர் 13 மற்றும் 16 ஆகிய நாட்களில் மற்ற இரண்டு போட்டிகள் நடக்க இருக்கிறது. மேலும், செப்டம்பர் 19 ம் தேதி டி20 போட்டி தொடர் தொடங்குகிறது.

இந்திய அணி:

ஒருநாள் :

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன் பிரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஏக்த பிஷ்ட், புனம் ராவுட், தீப்தி ஷர்மா, டி ஹெம்லதா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூர்த்தி, டேன்யா பாத்தியா (கீப்பர்), பூனம் யாதவ், ராஜேஸ்வரி கணகுவட், ஜுலன் கோஸ்வாமி, மன்சி ஜோஷி, ஷிக்கா பாண்டே

டி20 :

ஹர்மன் பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா (துணை கேப்டன்), மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், டி ஹெம்லாடா, தீப்தி ஷர்மா, அஞ்சுஜா பாட்டீல், டேன்யா பாட்டியா (கீப்பர்), பூனம் யாதவ், ஏக்த பிஷ்ட், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, மன்சி ஜோஷி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *