"விராட் கோலி இனிமேல் கேப்டன் பொறுப்பில் வேண்டாம் என சொன்னவருக்கே மீண்டும் பொறுப்பு" புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ! 1

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிற்கு 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் சேத்தன் சர்மா. இவர் தலைமையிலான குழுவின் பட்டியலை சற்றுமுன் பிசிசிஐ வெளியிடப்பட்டது.

நடந்து முடிந்த டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு மற்றும் அணி தேர்வு செய்யப்பட்ட விதம் இரண்டும் திருப்தி அளிக்கவில்லை என்பதால், கடந்தமுறை தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா தலைமையிலான மொத்த குழுவையும் நீக்குவதாக நவம்பர் மாதம் பிசிசிஐ அறிவிப்புகளை வெளியிட்டது.

"விராட் கோலி இனிமேல் கேப்டன் பொறுப்பில் வேண்டாம் என சொன்னவருக்கே மீண்டும் பொறுப்பு" புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ! 2

அதன் பிறகு அடுத்த 20 நாட்களுக்கு, தேர்வுக்குழு தலைவர் மற்றும் 4 உறுப்பினர் இடங்கள் என மொத்தம் 5 பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்காக கிட்டத்தட்ட 600 விண்ணப்பங்கள் வந்ததாகவும் பிசிசிஐ தகவல் தெரிவித்து. கடந்தமுறை தலைவராக இருந்த சேத்தன் சர்மா மீண்டும் அதே பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். பிசிசிஐ அதையும் ஏற்றுக்கொண்டது.

கிரிக்கெட் ஆலோசனை குழு, கிடைத்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான இறுதி பட்டியலை தேர்வு செய்தது. இலங்கை தொடருக்கு முன்னர் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கால தாமதம் ஆவதால், ஜனவரி 7ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது.

"விராட் கோலி இனிமேல் கேப்டன் பொறுப்பில் வேண்டாம் என சொன்னவருக்கே மீண்டும் பொறுப்பு" புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ! 3

இந்நிலையில் பிசிசிஐ, சனிக்கிழமையன்று அகில இந்திய மூத்த தேர்வுக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிவித்தது. அதில் சேத்தன் சர்மாவை மீண்டும் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு நியமித்துள்ளது. அவருடன் சேர்ந்து ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் தேர்வுக்குழுவின் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது பற்றி பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “எங்களுக்கு வந்த 600 விண்ணப்பங்களில் தீவிரமாக சலித்து 11 பேர் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டனர். அதிலிருந்து இந்த ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். சேத்தன் சர்மா மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். வந்ததிலேயே அவருடைய ஆவணங்கள் எங்களுக்கு மிகவும் திருப்தி அளித்தன. அதன் அடிப்படையில் சேத்தன் சர்மா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் நான்கு பேர் கடந்த முறை இருந்தவர்களாக இல்லாமல் புதியவர்கள் தேர்வு குழுவின் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.” என குறிப்பிடப்பட்டிருந்தது.

"விராட் கோலி இனிமேல் கேப்டன் பொறுப்பில் வேண்டாம் என சொன்னவருக்கே மீண்டும் பொறுப்பு" புதிய தேர்வுக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *