ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ செய்த செலவு எவ்வளவு தெரியுமா?
பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது போட்டிகளானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது.மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்று முடிந்து இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. மூன்று முறை தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இனி நடக்கவே நடக்காது என்ற நிலை இருந்தது.

ஒரு கட்டத்தில் ஊரடங்கு தளர்வு நீக்கப்பட்டவுடன் உலகம் முழுவதும் கால்பந்து, கூடைப்பந்து போன்ற தொடர்களும் நடைபெற்றன ரசிகர்கள் இல்லாமல் மூடிய மைதானத்தில் நடத்தப்பட்டது. இதனை உடனடியாக காப்பி செய்து கொண்ட பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டது. இதற்காக பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு புதிய ஸ்பான்சர் அறிவிக்கப்பட்டு விவோ ஐபிஎல் தொடர் என்பதற்கு பதிலாக ட்ரீம் லெவன் ஐபிஎல் தொடர் என்று நிர்ணயிக்கப்பட்டது.

இதன்மூலம் பிசிசிஐ 200 கோடி ரூபாயை இழந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஐபிஎல் தொடர் நடைபெற்றது. துபாய் ,சார்ஜா அபுதாபி ஆகிய மூன்று மைதானங்கள் பிசிசிஐ மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டு மேலும் 8 அணிகளும் அணி வீரர்கள் ஊழியர்கள் அனைவரும் துபாயில் உள்ள மிகப்பெரிய சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டார்கள். இந்நிலையில் இது அனைத்திற்கும் பிசிசிஐ எத்தனை கோடி செலவு செய்திறுக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்று மைதானங்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை கட்டணமாக செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதவிர 8 அணிகளும் தனித்தனியே விடுதிகளில் தங்குவதற்காக பல நூறு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பெரிய வருமானம் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் போட்டி நடைபெற்றாலும் 8 அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் நடத்தும் அப்படி இருந்தும் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் .
அதே நேரத்தில் ஒரு போட்டி நடத்தும் போது ஒரு கோடி ரூபாய் வரை இந்தியாவில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படிப்பார்த்தால் மொத்தம் 60 போட்டிக்கு தற்போது 100 கோடி ரூபாயை பிசிசிஐ கட்டணமாக செலுத்தி இருக்கிறது. இது கிட்டத்தட்ட 40 சதவீதம் அதிகமான தொகைதான்.