உள்ளூர் டி.20 தொடரான சையத் முஸ்தாக் அலி டிராபியின் சில விதிமுறைகளை பி.சி.சி.ஐ., மாற்றியுள்ளது.
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் ரஞ்சிக்கோப்பை தொடரைப்போல டி-20 தொடர் சையது முஸ்தாக் அலி கோப்பை தொடர் நடத்தப்படுவதும் வழக்கம்.
இதில் இந்தியாவின் உள்ளூர் அணிகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் பங்கேற்கும்.
இந்த ஆண்டுக்கான இந்த தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் கோப்பையை கைப்பற்ற போராடி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த தொடரில் பின்பற்ற சில போட்டி விதிமுறைகளை பி.சி.சி.ஐ., இந்த தொடருக்காக மாற்றியமைத்துள்ளது.
அதன் படி, கடந்த தொடரில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் சிறப்பாக விளையாடி வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களை மண்டலம் வாரியாக, ஒரு மண்டலத்திற்கு ஐந்து அணி என்ற கணக்கில் இரண்டு மண்டலமாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தினர். இதில் கிழக்கு மண்டலம் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த விதிமுறையை மாற்றியுள்ள பி.சி.சி.ஐ., கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என பிரிக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியின் அடிப்படையில் முதல் இரு அணிகள் என மொத்தம் 10 அணிகள் knockout சுற்றுக்கு தகுதி பெறும் என்று அறிவித்துள்ளது. Knockout சுற்று வரும் 21ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
மேலும் ஏபரல் மாத இறுதியில் துவங்க உள்ள ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதி நடைபெற உள்ளதையும் கருத்தில் கொண்டுள்ள பி.சி.சி.ஐ., இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை ஐ.பி.எல் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் உரிமையாளர்கள் குழுவிற்கு அடையாளப்படுத்துவதற்காகவே இது உறுதுனையாக இருக்கும் என்றும் பி.சி.சி.ஐ தரப்பில் கூறப்படுகிறது.