டொமஸ்டிக் லெவல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சென்ற ஆண்டுக்கான போதிய வருமானம் பிசிசிஐ தரவில்லை என்று தற்போது பகிரங்க செய்தி வெளியாகியுள்ளது. மேலும் இந்திய மகளிர் அணி சென்ற ஆண்டு இறுதியில் உலக கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டி வரை சென்றதற்காண வருமானமும் பெறவில்லை என்ற செய்தியும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால் வருமானம் ஏன் தரவில்லை என்பது குறித்த விளக்கத்தை அளித்துள்ளார்.
ஒவ்வொரு மாநிலங்களும் உரிய ஆவணங்களை தர வேண்டும்
இது குறித்து பேசியுள்ளார் பிசிசிஐ பொருளாளர் அருண், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளையாட்டு வீரர்களுக்கு சம்பளம் தருவதாக உறுதியளித்துள்ளார் என்று கூறியுள்ளார். மேலும் உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்கள் மொத்தமாக 700க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்.

அவர்கள் எந்தெந்த போட்டிகளில் விளையாடி னார்கள் என்பது குறித்த ஆவணங்களை அந்தந்த மாநிலங்களுக்கு உரிய கிரிக்கெட் கமிட்டி எங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி அவர்களுக்கு உரிய வருமானத்தை நாங்கள் ஒதுக்க முடியும். ஆனால் இதுவரை எந்த மாநிலமும் சரியான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
உள்ளூர் ஆட்டங்களில் விளையாடும் வீரர்களின் வருமானம்
கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்டங்களில் விளையாடி வரும் வீரர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு சீசனுக்கு 10 முதல் 20 லட்ச ரூபாய் வருமானம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இரஞ்சி டிராபி தொடர் தான் இருப்பதிலேயே மிக அதிக அளவில் வருமானத்தை ஈட்டித்தரும் தொடராகும். ரஞ்சித் டிராபி தொடரில் ஒரு போட்டியில் விளையாடும் வீரர்கள் வருமானம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது விஜய் ஹசாரே மற்றும் சையது முஷ்டாக் அழி டிராபி தொடர்களில் வருமானம் சற்று உயர்த்தப்பட்டு இருக்கிறது என்று அருண் விளக்கம் அளித்துள்ளார். புதிய வருமான விதிமுறையின்படி இந்த இரு தொடர்களிலும் விளையாடும் வீரர்களுக்கு ஒரு போட்டிக்கான வருமானம் 35 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் மகளிர் அணைக்கும் உரிய வருமானத்தை கூடிய விரைவில் தர இருப்பதாகவும் பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.