உனக்கான நேரம் வரும் காத்திருடா தம்பி; இளம் வீரருக்கு தல கொடுத்த அட்வைஸ் !! 1

பொருமையுடன் காத்திருங்கள் கண்டிப்பாக இந்திய அணிக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் இஷான் கிஸனுக்கு முன்னள் இந்திய அணியின் கேப்டன் தோனி அறிவுரை.

உனக்கான நேரம் வரும் காத்திருடா தம்பி; இளம் வீரருக்கு தல கொடுத்த அட்வைஸ் !! 2

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஸன் இதுவரை 12 போட்டிகளில் பங்கேற்று 483 ரன்கள் எடுத்துள்ளார், இவருடைய ஆவரேஜ் 53.66 மேலும் இவருடைய அதிரடியான ஸ்ட்ரைக் ரேட் 144.17 இன்னும் 2020ஐபிஎல் போட்டித் தொடர்களில் அதிகமான சிக்ஸ் அடித்த வீரர் இவர்தான் இதுவரை மொத்தம் 29 சிக்ஸ்களை அடித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தனது அணிக்காக விளையாடுகிறார். இன்னும் சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் கீ பிளேயராக திகழ்கிறார்.

மேலும் இவருடைய அதிரடியான ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இருந்தபோதும் இஷான் கிசனுக்கு சீனியர் இந்திய அணியில் இடம் கிடைக்காது பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

உனக்கான நேரம் வரும் காத்திருடா தம்பி; இளம் வீரருக்கு தல கொடுத்த அட்வைஸ் !! 3

இவருடன் U-19 சர்வதேச போட்டியில் பங்கேற்ற ரிஷப் பண்ட், கலீல் அஹமத் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களுக்கு சீனியர் இந்திய அணியில் இடம் கிடைத்துவிட்டது. ஆனால் இஷான் கிஸனுக்கு வாய்ப்பு அளிக்காதது அவருக்கும் அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இஷன் கிஷன் 2020 ஐபிஎல் போட்டியில் மட்டுமல்லாமல் உள்ளூர் போட்டிகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் இவருடைய அதிரடியான ஆட்டம் பலரை வியப்பில் ஆழ்த்தியது.

முதலில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் அணீயில் இடம்பெறவில்லை. பின் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி அணியில் ஒரு முக்கிய வீரராக திகழ்கிறார்.

உனக்கான நேரம் வரும் காத்திருடா தம்பி; இளம் வீரருக்கு தல கொடுத்த அட்வைஸ் !! 4

இஷான் கிஸனுக்கு இந்திய அணியின் முன்னள் கேப்டன் தல தோனி பல அறிவுரைகள் கொடுத்துள்ளார். ஜார்க்கண்ட் அணியில் தல தோனியுடன் சேர்ந்து முஷ்டாக் அலி டி-20 டிராபி தொடரில் விளையாடும் வாய்ப்பு இஷான் கிடைத்தது.

அதில் தல தோனி இஷான் கிஸனுக்கு பல அறிவுரைகளை வழங்கினார் அதில் முக்கியமானது, ’’பொறுமையுடன் காத்திருங்கள் கண்டிப்பாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்’’ என்று அறிவுரை வழங்கினார். மேலும் தல தோனி இஷான் கிஸனுக்கு விக்கெட் கீப்பர் நுணுக்கங்களும் பேட்டிங் யுக்திகளை சொல்லிக்கொடுத்து அவரை ஊக்கப்படுத்தினார்.

2020க்கான ஐபிஎல் போட்டி தொடர் துபாய் அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது.அதில் டெல்லி கேப்பிடஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதி போட்டி விளையாடவுள்ளது,இந்த போட்டியில் யார் கோப்பையை கைபற்றுவார்கள் என்று ரசிகர்கள் எதிற்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இஷான் மிகச்சிறப்பாக விளையாடுவார் என்று பலர் தனது கருத்தை தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *