சூதாட்ட புகார்; அணி உரிமையாளரை கைது செய்துள்ளது காவல்த்துறை !! 1

சூதாட்ட புகார்; அணி உரிமையாளரை கைது செய்துள்ளது காவல்த்துறை

கர்நாடகா பிரிமியர் லீக் டி20யின் பெல்காவி பேந்தர்ஸ் அணி உரிமையாளர் அலி அஃப்சக் தாரா சூதாட்டத்தில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் பெங்களூரில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல், கூறிய போது, “அலி அஃப்சக் தாரா சூதாட்டக் கும்பலின் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ-யின் ஊழல் ஒழிப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்ததையடுத்து சிசிபி விசாரணையை ஏற்றுக் கொண்டது.

சூதாட்ட புகார்; அணி உரிமையாளரை கைது செய்துள்ளது காவல்த்துறை !! 2
Bengaluru, September 25: Ashfaq Ali Thara, the owner of a Karnataka Premier League (KPL) team Belagavi Panthers, was arrested in Bengaluru in connection with an alleged international cricket betting scandal, police said.

மகளிர் கிரிக்கெட்டில் இரண்டு நபர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிசிசிஐ புகார் அளித்த சம்பவத்துக்குப் பிறகே தற்போது கர்நாடகா பிரிமியர் லீக் அணி உரிமையாளர் சூதாட்டத்தில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறும்போது, தனிநபர்கள் செய்யும் தவறுகளுக்காக லீகே தவறு என்று கூறுவது சரியல்ல என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *