பலர் சர்ச்சைகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ்

பல்வேறு பிரச்சினை களுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் பென் ஸ்டோக்ஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் முடிவில் பெண் ஸ்டோக்ஸ் மற்றும் இங்கிலாந்து ஒப்பனர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் இங்கிலாந்து நாட்டிங்காம் கவுண்டிட்யில் ஒரு 27 வயது மதிக்கதக்க நபருடன் கை கலப்பில் ஈடு பட்டனர்.

இதில் பென் ஸ்டோக்ஸ் அந்த நபரை மிகக் கடுமையாக தாக்கினார். இதனால் அந்த நபர் போலீசில் புகார் கொடுத்தன் பேரில் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்சை ஒரு நாள் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

இந்த பிரச்சனை பெரிதாக பின்னர் ஸ்டோக்ஸ் அந்த நபரை கடுமையாக தாக்கிய வீடியோ வெளியானது. இதனால், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் ஆகிய இருவரின் பெயர்கள் இங்கிலாந்து அணியில் இடம் பெறாது என அறிவித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இதனான் தற்போது நடைபெற்று வரும் ஆஷஷ் டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்தின் முக்கிய வீரரான பென் ஸ்டோக்சின் பெயர் இடம் பெறவில்லை. தற்போது ஆஷஷ் தொடரின் முதல் இரண்டும டெஸ்ட் போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியா பயணம் செய்தார். மேலும் தனது கிரிக்கெட் கிட்டுடன் ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தார் ஸ்டோக்ஸ். இதனால், ஆஷஷ் தொடரில் தான் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என பலரும் நினைத்தனர்.

ஆனால், தற்போது அதற்கான உண்மையான காரணம் வெளிவந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் தொடர் முடிந்தவுடன் வரும் ஜனவரி மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் தொடர் துவங்குகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து அணி. இந்த அணியில் ஒப்பனர் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஆள் ரவுடண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி : இயான் மார்கன் (கேப்டன்), மோயீன் அலி, ஜானி பெய்ர்ஸ்ட்ரோ, ஜெக் பால், சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் குர்ரான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கெட், அடில் ரசிட், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்

Editor:

This website uses cookies.