எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு; கொதித்தெழுந்த பென் ஸ்டோக்ஸ் !! 1

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு; கொதித்தெழுந்த பென் ஸ்டோக்ஸ்

தனது குடும்பத்தில் நடந்த துயர சம்பவம் ஒன்றை செய்தியாக்கி வெளியிட்ட ஆங்கில நாளே ஒன்றை பென் ஸ்டோக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தி சன் நாளேடு வெளியிட்ட செய்தியால் மனவேதனை அடைந்ததாகவும், இதுமோசமான பத்திரிகை கலாச்சாரம் என்றும் பென் ஸ்டோக்ஸ் தனது ட்வி்ட்டர் பக்கத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பென் ஸ்டோக்ஸின் பூர்வீகம் நியூஸிலாந்து. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நியூஸிலாந்தில் நடந்த கொடூரமான சோகத்தால் அங்கிருந்து இங்கிலாந்து குடிபெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த சம்பவத்தை இங்கிலாந்தில் உள்ள ‘தி சன்’ நாளேடு துப்புறிந்து அந்த கதையையும், படங்களையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு; கொதித்தெழுந்த பென் ஸ்டோக்ஸ் !! 2

இந்த செய்தியை ‘தி சன்’ நாளேட்டில் பார்த்த பென் ஸ்டோக்ஸ் மிகுந்த ஆவேசமும், அதிருப்தியும் அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
31 ஆண்டுகளுக்கு முன் எனது தனிப்பட்ட குடும்பத்தில் நிகழ்ந்த சோகமான, வேதனைதரக் கூடிய கதையையும், விவரங்களையும் தி சன் நாளேடு வெளியிட்டுள்ளது. இப்படி ஒரு மோசமான, மட்டமான, பத்திரிகை கலாச்சாரத்தை குறித்து பேசுவதற்கு எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு; கொதித்தெழுந்த பென் ஸ்டோக்ஸ் !! 3

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த கொடூரமான மறக்க வேண்டிய சம்பவத்தை கடக்க நாங்கள் கடுமையாக பணியாற்றி இருக்கிறோம். இது ஆழ்ந்த வேதனை தரக்கூடிய சம்பவம்.

ஆனால் தி சன் நாளேடு ஒரு நிருபரை நியூஸிலாந்துக்கு அனுப்பி, எனது தாயாரின் குடும்பத்தாரிடம் பேசி அந்த விவரங்களை கேட்டு வெளியிட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

என்னுடைய வாழ்க்கையில் நடந்த, குடும்பத்தை பாதித்த மோசமான, சோகச் செய்தியை வெளியிட்ட தி சன் நாளேட்டின் செயல் இதைத்தவிர மோசமானதாக இருக்க முடியாது

இந்த விவரங்களை வெளியிட்டதால், என் தாய்க்கு வாழ்நாள் நாள் முழுவதும் பாதிப்பையும், பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும். என்னுடைய பெயரைப் பயன்படுத்தி மன்னிப்புக் கேட்டு எனது பெற்றோரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியிடுவது எனது பெற்றோரை கடுமையாக பாதித்துள்ளது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸிற்கு ஆதரவாக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும், தி சன் நாளேட்டை சமூக வலைதளங்கள் மூலம் வச்சு செய்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *