முகமது சமி, விருதிமான் சகா ஆகியோரை விட முடியாது.

India's Mohammed Shami (C) celebrates with his teammates after he dismissed Sri Lanka's Rangana Herath during the third day of the second Test cricket match between Sri Lanka and India at the Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 5, 2017. / AFP PHOTO / Lakruwan WANNIARACHCHI

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லி பேரொஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று காலை வழக்கமான நேரத்தில் துவங்கியது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மற்றும் விக்கெட் கீப்பர் விருதிமான் சகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த டெஸ்ட் போட்டி  சரியாக அதிகாரப்பூர்வமாக  டிசம்பர் 6ஆம் தேதி முடிவடைகிறது. மேலும், இந்த வருட ரஞ்சிக்கோப்பை தொடரின் காலிறுதி போட்டிகள் டிசம்பர் 7ஆம் தேதியில் இருந்து துவங்குகிறது. காலிறுதி போட்டிக்கு பெங்கால் அணியும் தேர்வாகி உள்ளது. பெங்கால் அணியில் முகமது சமி மற்றும் கீப்பர் சகா ஆகியோர் உள்ளனர்.

 

ஆனால், தற்போது அவர்கள் இந்திய அணிக்கு ஆடி வருவதால் தங்களது உள்ளூர் அணிக்கு திரும்ப முடியாது. அதே போல், டிசம்பர் 7ஆம் தேதி மட்டுமே துவங்கவுள்ளது ரஞ்சி காலிறுதி போட்டிகள். அதே, போல இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகள் டிசம்பர் 6ஆம் தேதி முடியவடைகிறது.

Cricket, India, Sourav Ganguly, Virat Kohli, New Zealand

இதன் காரணமாக பெங்கால் ரஞ்சி அணிக்கு சமி மற்றும் சகாவை அனுப்புமாறு பி.சி.சி.ஐக்கு பெங்கால் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், டெஸ்ட் போட்டி 6ஆம் தேதி முடிவடைந்தாலும் இருவரையும் அனுப்ப இயலாது என கூறியுள்ளது.

முன்னதாக, இந்திய அணியின் உள்ளூர் போட்டிகளில் ஆடும் இந்திய வீரர்கள் உள்ளூர் தொடர்களில் ஆடக்கூடாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம் கூறியது. அப்படியான போட்டிகளில் ஆடும் இந்திய வீர்ரகள் தேசிய அணிக்காக நன்றாக ஆடிக்கொண்டிருக் கும் போது உள்ளூர் போட்டிகளில் சிலையாடி  காயமடைந்து விடுவார்கள் என அப்படியான அறிவிப்பை வெளியிட்டது பி.சி.சி.ஐ

 

ஆனால் தற்போது குகந்து சமி மற்ரும் விருத்திமான் சகா ஆகியோர் லீமிடெட் ஓவர் இந்திய அணியில் இல்லாத போதிலும் இவர்கள் இருவரையும் தற்போது உள்ளூர் போட்டிகளுக்கு அனுப்ப மறுத்து வருகிறது.

India’s Mohammed Shami (C) celebrates with his teammates after he dismissed Sri Lanka’s Rangana Herath during the third day of the second Test cricket match between Sri Lanka and India at the Sinhalese Sports Club (SSC) Ground in Colombo on August 5, 2017. / AFP PHOTO / Lakruwan WANNIARACHCHI

இதனால் பெங்கால் கிரிக்கெட் வாரியம் இருவருக்கும் மாற்று    வீரரை அறிவித்துள்ளது. தற்போது அண்டர் 19 சேலஞ்சர் கோப்பையில் விளையாடி வரும் வீரர் இஷான் போரேல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். எப்படியும் தற்போது அவர் சேலஞ்சர் கோப்பை ஆடி வருவதால் அவரை அனுப்பவும் அந்த அணி நிர்வாகம் சம்மதித்தால் தான் நடக்கும்.

 

இலங்கை தொடர் முடிந்தவுடன், முக்கியமான தென்னாப்ரிக்க நாட்டிற்கு பயணம் செய்யவுள்ளதால்  இருவரும் காயமடைந்து விடக்கூடாது என இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Editor:

This website uses cookies.