பென் ஸ்டோக்ஸால் வந்த புதிய பிரச்சனை... சீனியர் வீரர்களை எச்சரித்த இங்கிலாந்து அணியின் கேப்டன்!! 1

பென் ஸ்டோக்ஸின் ஓய்வு கிரிக்கெட் போட்டியை நடத்துபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வீரராகவும் திகழ்ந்து வருகிறார்.பென் ஸ்டோக்ஸால் வந்த புதிய பிரச்சனை... சீனியர் வீரர்களை எச்சரித்த இங்கிலாந்து அணியின் கேப்டன்!! 2

மிக சமீபத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்ட பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து டெஸ்ட் அணியை மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பயம் இல்லாத மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி வாகையூம் சூடியது.

பென் ஸ்டோக்ஸே டி.20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாகவும் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி கொள்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

பென் ஸ்டோக்ஸால் வந்த புதிய பிரச்சனை... சீனியர் வீரர்களை எச்சரித்த இங்கிலாந்து அணியின் கேப்டன்!! 3

அந்த அடிபபடையில் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிராக (19-07-22) நடைபெற்ற ஒருநாள் போட்டியுடன் ஓய்வை பென் ஸ்டோக்ஸ் அறிவித்துவிட்டார்.

பென் ஸ்டோக்சின் ஓய்வு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இவருடைய இந்த முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில் பென்ஸ்டோக்ஸ் எடுத்த முடிவு குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமாக பேசியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸால் வந்த புதிய பிரச்சனை... சீனியர் வீரர்களை எச்சரித்த இங்கிலாந்து அணியின் கேப்டன்!! 4

இது குறித்து ஜாஸ் பட்லர் பேசுகையில், “பென் ஸ்டோக்ஸின் முடிவு நிச்சயம் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும், பென்ஸ்டோக் போன்ற ஒரு வீரர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து மூன்று விதமான தொடரிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். இருந்த போதும் அவர் வேலைப்பளு காரணமாக ஒருநாள் தொடரில் ஓய்வை அறிவித்துள்ளார், சர்வதேச கிரிக்கெட் பொருத்தவரையில் எந்த ஒரு வீரராக இருந்தாலும் சிறப்பாக செயல்பட வேண்டும், ரசிகர்களை பொறுத்தவரையில் இது வருத்தத்திற்குரிய விஷயமாக அமைந்துவிட்டது இங்கிலாந்து அணிக்கு ஒருநாள் தொடரில் இது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தினாலும் டெஸ்ட் தொடரில் நிச்சயம் இது அதிக பலத்தை கொடுக்கும், டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக இருக்கும் பென்டோக்ஸ் நிச்சயம் டெஸ்ட் தொடரில் சிறப்பாகவும் நீண்ட காலமும் விளையாடுவார் என்று ஜாஸ் பட்லர் பேசியிருந்தார்.

பென் ஸ்டோக்ஸால் வந்த புதிய பிரச்சனை... சீனியர் வீரர்களை எச்சரித்த இங்கிலாந்து அணியின் கேப்டன்!! 5

பென் ஸ்டோக்ஸ் தனது ஓய்வு அறிவிப்பின்போது நாங்கள் மகிழுந்து (car) கிடையாது நீங்கள் நினைத்தபடி செயல்படுவதற்கு நாங்களும் மனிதர்கள் தான்,ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியையும் வைக்கிறீர்கள் ஒருநாள் போட்டியையும் வைக்கிறீர்கள் இந்த முடிவு சல்லி தனமாக உள்ளது என்று வேலைபளு குறித்து பென் ஸ்டோக்ஸ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *