ரோகித், தவான், கோஹ்லி இல்லை..சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்த ஆஷிஷ் நேஹ்ரா! 1

2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆசிஸ் நெஹ்ரா.

ஐபிஎல் தொடர் முடிவுற்று அதில் சிறப்பாக செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. மேலும் முதல் முறையாக கோப்பையை தக்க வைத்துக்கொண்டது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ், இஷன் கிஷன் பும்ரா, போல்ட், பாண்டியா என இடம் பெற்ற அனைவரும் தங்களது பணிகளை சிறப்பாக செய்தனர். இந்த மும்பை அணி உலகில் எந்த 20 ஓவர் அணியையும் வீழ்த்தி கூடியது என்கிற அளவிற்கு பலமிக்கதாக காணப்பட்டது. ஆதலால் இவர்கள் எளிதாக ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியும் என கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப இறுதியில் சாம்பியன் பட்டத்தையும் பெற்றனர்.

இந்நிலையில், இந்த வருட ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 11 வீரர்கள் கொண்ட அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தேர்வு செய்திருக்கிறார். அவர் தனது அணியில் இரண்டு சதங்கள் அடித்த தவான், பெங்களூரு கேப்டன் விராட் கோலி மற்றும் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா என இந்திய அணியின் முன்னணி 3 வீரர்களையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

அவர் தேர்வு செய்த 11 பேர் கொண்ட அணியில் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் இடம் பெற்றிருந்தனர். மூன்றாவது இடத்தில் மும்பை அணிக்கு ஆணிவேராக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றிருந்தார். நான்காவது மற்றும் ஐந்தாம் இடங்களில் இஷன் கிஷன் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் இருவருக்கும் இடமாளித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சூழல் பந்துவீச்சு வரிசையில் பெங்களூரு அணிக்கு முக்கிய வீரராக இருந்த யுஸ்., சஹல் இடம் பெற்றிருக்கிறார். வேகப்பந்து வீச்சை பொருத்தவரை இந்திய வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோருக்கு இடம் கொடுத்திருந்தார். மைதானத்தை பொருத்து வேகப்பந்து வீச்சின் தேவை இல்லாத பொழுது முகமது சமி இடத்திற்கு மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடம்பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறாக அவர் தனது சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்திருந்தார்

நேஹ்ரா தேர்வு செய்த சிறந்த ஐபிஎல் 11 வீரர்கள்:

கே.எல்.ராகுல், டேவிட் வார்னர், சூர்யகுமார் யாதவ், ஏபி டிவில்லியர்ஸ், இஷான் கிஷன் (கீப்பர்), ஹார்டிக் பாண்ட்யா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரஷீத் கான், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் / முகமது ஷமி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *