வீடியோ; நியூசிலாந்து வீரரை செம்ம மாஸாக ரன் அவுட் செய்த விராட் கோஹ்லி
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில், அசால்ட்டாக ஜாகிங் போன முன்ரோ, கோலியின் சாமர்த்திய புத்தியால் அவுட்டானார்.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதிய நான்காவது டி-20 போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியும் சூப்பர் ஓவருக்கு செல்ல, ராகுல், கோலியின் சூப்பர் ஆட்டத்தால் மீண்டும் இந்திய அணி வெற்றியை வசமாக்கியது. இதன் மூலம் இந்த தொடரில் இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி நாளை மறுநாள் மவுண்ட் மாங்கானியில் நடக்கிறது.
இதில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்த போது போட்டியின் 12ஆவது ஓவரை இந்திய ஆல் ரவுண்டர் சிவம் துபே வீசினார். இந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட முன்ரோ பந்தை ஸ்வீப் செய்து இரண்டு ரன்கள் ஓடினார். ஆனால் இரண்டாவது ரன் ஓடும் போது ஜாலியாக ரொம்ப அசால்ட்டாக ஜாகிங் செய்தார்.
This is called commitment with your fielding ?#INDvsNZ pic.twitter.com/i33tadKmSt
— SherAz SAeed?? (@SherAzS97) January 31, 2020
இதை கவனித்த கோலி, தன்பக்கமாக சார்துல் வீசிய பந்தை கச்சிதமாக கேட்ச் செய்து, முன்ரோ ஓடிய முனையில் உள்ள ஸ்டெம்ப்பை குறிவைத்து வீசினார். கோலி விசிய பந்து ஸ்டெம்ப்பை கணக்கச்சிதமாக பதம் பார்த்தது. இதையடுத்து முன்ரோ பரிதாபமாக விக்கெட்டை இழந்து வெளியேறினார்.