இலங்கை அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் ஒரு முழு நீளத் தொடரை விளையாட இந்தியா வந்துள்ளது. இதற்காக மூன்று நாள்களுக்கு முன்னர் தினேஷ் சண்டிமால் தலைமையிளான இலங்கை அணி இந்தியா வந்தது.
இந்தியா வந்துள்ள அந்த அணி இதற்கு முன்னர் இந்தியாவிடம் அவர்களது மண்னியலேயே 3 டெஸ்ட, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி என அனைத்திலும் தோல்வி அடைந்தது. அதற்கு முன்னர் ஜிம்பாப்வே அனியிடமும் தன் மண்ணிலேயே டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து பின்னர் இரண்டாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்று போராடி ட்ரா செய்தது.
இதனை வைத்து இந்திய அணியின் முன்னாள் சுழற்ப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இலங்கை அணியை கலாய்த்துள்ளார். இந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கைக்கு இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் திமுத் கருணாரத்னே ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
அதாவது, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவி அஸ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜாவை எதிர்கொள்ள நாங்கள் சிறப்பான வியூகம் வகுத்துள்ளோம். இருவரின் பொருமையை சோதித்து அவர்களை எதிர்கொள்ளப் போகிறோம். இது தான் எங்கள் வியூகம் எனக் கூறினார்.
இதனை ஹிந்துஸ்தான் ஸ்போர்ட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது. இதனைப் பார்த்த ஹர்பஜன் சிங்,
இதேல் போல் தான் ஜிம்பாப்வே தொடரில் ஆடினீர்கள் போல, ஜிம்பாப்வே அணியால் தோற்க்கடிக்கப்பட்ட அணி தான இது. அந்த போட்டியில் முதல் ஆட்டத்தில் 200 இரண்டாவது ஆட்டத்தில் 150. அவர்களது அடிமட்டத்தில் உள்ளது இலங்கை அணி. மீண்டும் தனது ஃபார்மிற்கு வர நம்பிக்கை கொள்வோம்.
எனக் ட்வீட் செய்திருந்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டர் ஹர்பஜன் சிங்.
இதற்கு முன், பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்ற பெற்ற இலங்கை அணி, அந்த அணியுடனான 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டி என அனைத்தையும் தோல்வியடைந்து பரிதாபத்துடன் இந்தியா வருகிறது.
இந்தியா-இலங்கைத் தொடரின் போட்டி அட்டவணை:
டெஸ்ட் தொடர்
- முதல் போட்டி, நவ்.16-20, கொல்கத்தா
- இரண்டாவது போட்டி, நவ்.24-28, நாக்பூர்
- மூன்றாவது போட்டி, டிசம்.02-06, டெல்லி
ஒருநாள் தொடர் அட்டவணை :
- முதல் ஒருநாள் போட்டி, டிசம்.10, தர்மசாலா
- இரண்டாவது போட்டி, டிசம்.13, மொஹாலி
- மூன்றாவது போட்டி, டிசம்.17, விசாகப்பட்டினம்
டி20 தொடர் அட்டவணை :
- முதல் டி20 போட்டி, டிசம்.20, கட்டாக்
- இரண்டாவது டி20 போட்டி, டிசம்.22, இந்தூர்
- மூன்றாவது டி20 போட்டி, டிசம்.24, மும்பை