விராட் கோலிக்கும், ரஹானேவிற்கும் இது தான் வித்தியாசம்; விளக்கம் கொடுக்கும் பயிற்சியாளர் !! 1


இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு கோச் அருண் பரத் அளித்த பேட்டியில் , ரஹானே மற்றும் விராட் கோலி ஆகிய இருவரின் கேப்டன்ஷிப்பில் உள்ள வித்தியாசம் பற்றி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்று விட்டு தனது குழந்தையை பார்ப்பதற்காக இந்தியா திரும்பினார் இதனால் இந்திய அணி கேப்டனாக அஜிங்கியா ரஹானே தேர்வு செய்யப்பட்டார். இவர் அந்த பொறுப்பை மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை திறமையாக வழிநடத்தினார்.

விராட் கோலிக்கும், ரஹானேவிற்கும் இது தான் வித்தியாசம்; விளக்கம் கொடுக்கும் பயிற்சியாளர் !! 2


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரஹானே தலைமையில் அபார வெற்றி பெற்றது இதன் மூலம் ரஹானேவின் புகழ் மேலும் உயர்ந்தது, இதுவரை டெஸ்ட் போட்டியில் அவர் தலைமை ஏற்று இந்திய அணி தோல்வி அடையவில்லை என்று பல கிரிக்கெட் ரசிகர்களும் பல கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்திய அணிக்கு ரஹானேவை நிரந்தர டெஸ்ட் கேப்டனாக ஆக்கும்படி தனது ஆதரவை தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் இருவரில் யார் சிறந்த கேப்டன் என்ற விவாதம் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு கோச்சான அருண் பரத் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ரஹானே மிகவும் அமைதியானவர் மேலும் அணி வீரர்கள் தவறு செய்தாலும் அதை மிகவும் பொறுமையுடன் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு அதனை சரி செய்வார்.

விராட் கோலிக்கும், ரஹானேவிற்கும் இது தான் வித்தியாசம்; விளக்கம் கொடுக்கும் பயிற்சியாளர் !! 3


அதேபோன்று விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமான வீரர், இவர் ஆக்ரோசமாக செயல்பட்டாலும் இக்கட்டான நிலையில் சரியான முடிவை எடுத்து அணியை வெற்றி பெறச் செய்வார் என்று அவர் தெரிவித்தார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *