மூத்த வீரருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க... விராட்கோலி மாதிரி திரும்பவும் ஃபார்முக்கு வந்துருவார் - முன்னாள் வீரர் வலியுறுத்தல்! 1

விராட் கோலி போன்று புவனேஸ்வர் குமாருக்கும் ஓய்வு கொடுங்கள் நிச்சயம் மீண்டும் பழைய பார்மிற்கு வந்து விடுவார் என மேத்தியூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றி இருந்தாலும், இந்திய அணியின் பந்துவீச்சு சற்று கேள்விக்குறியாகி உள்ளது. பேட்ஸ்மேன்கள் மூன்று போட்டியிலும் மிகச் சிறப்பாக விளையாடினர். ஆனால் பந்துவீச்சில் காணப்பட்ட பின்னடைவு காரணமாக, முதல் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் அடித்தும் அதைக்கட்டுப்படுத்த முடியாமல் தோல்வியை தழுவியது.

மூத்த வீரருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க... விராட்கோலி மாதிரி திரும்பவும் ஃபார்முக்கு வந்துருவார் - முன்னாள் வீரர் வலியுறுத்தல்! 2

 

இரண்டாவது போட்டியில் 8 ஓவர்களில் 90 ரன்கள் விட்டுக் கொடுத்தது. மூன்றாவது போட்டியில் 186 ரன்கள் வரை ஆஸ்திரேலியா அணியால் அடிக்க முடிந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் குறிப்பாக புவனேஸ்வர் குமார் பின்னடைவை சந்தித்து இருக்கிறார். முதல் டி20 போட்டியில் நான்கு ஓவர்களில் 52 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் மோசமான நிலையில் காணப்பட்டார். இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் மூன்று ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருந்தார்.

புவனேஸ்வர் குமாரின் சமீபத்திய ஃபார்ம் மோசமாக இருக்கிறது. டி20 உலக கோப்பைக்கு செல்லும் இந்திய அணிலும் இவர் இடம்பிடித்து இருப்பதால் கவலைக்குரியதாகவும் உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் இவர் இருக்கிறார். அதில் இவருக்கு ஓய்வு கொடுத்து நல்ல மனநிலையுடன் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வரவேண்டும் என முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

மூத்த வீரருக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க... விராட்கோலி மாதிரி திரும்பவும் ஃபார்முக்கு வந்துருவார் - முன்னாள் வீரர் வலியுறுத்தல்! 3

 

“புவனேஸ்வர் குமார் மிகவும் சோர்வாக தெரிகிறார். அவரது பந்துவீச்சில் அது வெளிப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது இயல்பான ஒன்று. விராட் கோலிக்கு எப்படி சிறிது காலம் ஓய்வு கொடுத்து மீண்டும் இந்திய அணிக்குள் எடுத்து வந்தார்களோ! அதுபோன்று புவனேஸ்வர் குமாருக்கும் சிறிது காலம் ஓய்வினை கொடுக்க வேண்டும். அதற்கேற்றார் போல விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படுகிறார். அதே போன்ற நல்ல மனநிலையுடன் புவனேஸ்வர் குமார் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார். தற்போது அணியில் அனுபவமிக்க பும்ரா இருக்கிறார். அவர் பார்த்துக் கொள்வார்.”

“வேகப்பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படுவது இயல்பு. அதே போன்று சோர்வு ஏற்படுவதும் இயல்பு. இதனை நிர்வாகம் சரியாக புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய ஓய்வினை கொடுத்தால் எந்தவித அழுத்தமும் இன்றி மீண்டும் அணிக்குள் திரும்பி நன்றாக செயல்படுவார்கள். மிகச்சிறந்த நாட்களில் அதிக போட்டிகளில் விளையாட வைப்பது எவ்வளவு நல்லதோ! அதேபோன்று மோசமான நாட்களில் சிறிது காலம் ஓய்வு கொடுத்து அழுத்தத்தை குறைப்பதும் மிகவும் முக்கியமானது.” என்று தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *