இந்தியா-நியூசிலாந்து இடையேனான இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று நியிசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து ஆடி வருகிறது. முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவிற்கு பதில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்து அணிக்காக துவக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்டில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் களம் இறங்கினர். துவக்க முதலே இருவரையும் அசட்டையாக பீட் செய்து வந்தனர் இந்திய பந்து வீச்சாளர்கள் புவி மற்றும் பும்ரா.
மூன்றாவது ஒவரில் புவனேஷ்வர் குமார் முதல் விக்கெட்டாக மார்டி கப்டியலை கீப்பர் தோனியிடம் விக்கெட் எடுத்தார். பின்னர் வந்த கேன் வில்லியம்சனை ஜஸ்பிரிட் பும்ரா லெக் பையில் தூக்கினார்.
ஆனால், மற்றொரு துவக்க வீரரான காலின் முன்ரோ ஒரு சிக்சர் எல்லாம் அடித்து இந்திய அணிக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார். சற்று சுதாரித்துக் கொண்ட புவனேஷ்வர் குமார். 7ஆவது ஓவரை அருமையாக வீசி முன்ரோவை தனதாக்கினார்.
7ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் இருந்து முன்ரோவிற்கு தண்ணி காட்டினார் புவனேஷ்வர். 2ஆவது பந்தை ஷார்ட் பாலாக வாச முன்ரோ பொருமையாக ஆஃப் சைடில் தட்டி விட்டர். பின்னர் 3ஆவது பந்தை ஷார்டாக அவரது உடம்பிற்கு வீச அந்த பந்தில் குனிந்து கொண்டார் முன்ரோ. இந்த பந்தில் இருந்து ஃப்ரன் ஃபூட்டில் ஆட சற்று யோசித்து பேக் ஃபூட்டிலேயே ஆட முனைந்தார் முன்ரோ.
இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திய புவனேஷ்வர் அடுத்த இரண்டு பந்துகலி வெடுக்கென ஷார்டாக வீசி முன்ரோவை ஃப்ரன்ட் ஃபூட்டில் ஏறாத படி பார்த்துக்கொண்டார். 6ஆவது பந்தை அதே போல் எதிர்பார்த்துக் காத்திருந்த முன்ரோவிற்கு, ஒரு குட் லென்த் நக்குல் பந்தை அழகாக வீசினார் புவனேஷ்வர். சற்றும் எதிர்பாராக முன்ரோ பேக் ஃபூட்டில் இருந்தபடியே அந்த பந்தை தடுக்கம் முயற்சித்தார். ஆனால், அந்த நக்குல் பந்து முன்ரோவின் பேட் மற்றும் பேடின் இடையில் புகுந்து அவரது ஸ்டம்பை பந்தம் பார்த்தது.
2ஆவது பந்தில் இருந்து அழகாக செட் செய்து முன்ரோவை தூக்கிவிட்டார் புவனேஷ்வர் குமார். பின்னர் 17 பந்துகளுக்கு 10 ரன்னுடன் வெளியேறினார் காலின் முன்ரோ. அந்த வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/VKCrick/status/923108658287751168
தற்போது நியூசிலாந்து அணி 52 ரன்னிற்கு 3 விக்கெட் இழப்பிற்கு ஆடி வருகிறது.