தென் ஆப்ரிக்காவை திணறடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் புவனேஷ்வர் குமார் !! 1

தென் ஆப்ரிக்காவை திணறடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் புவனேஷ்வர் குமார்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் மூலம் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் 5-1, டி20 தொடரை 2-1 என வென்று வரலாற்று சாதனைப் படைத்தது.

தென் ஆப்ரிக்காவை திணறடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் புவனேஷ்வர் குமார் !! 2

முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் புவனேஸ்வர் குமார் வீழ்த்தி அசத்தினார். 2வது போட்டியில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்றாலும் நேற்று நடைப்பெற்ற 3வது டி20 போட்டியில் 4 ஓவரில் வெறும் 24 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தென் ஆப்ரிக்காவை திணறடித்ததன் மூலம் புதிய சாதனை படைத்தார் புவனேஷ்வர் குமார் !! 3
India’s Suresh Raina (R) celebrates with teammate Bhuvneshwar Kumar (L) after taking a catch to dismiss unseen South African batsman Chris Morris during the first T20I cricket match between South Africa and India at The Wanderers Cricket Stadium in Johannesburg on February 18, 2018

இந்நிலையில் இரு நாடுகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (7) வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
இந்த சாதனையின் மூலம் இவர் தொடர் நாயகன் என்ற பெருமையைப் பெற்றார்.
இவருக்கு அடுத்தபடியாக பும்ரா, பரிந்தர் ஸ்ரன் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 6 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

குமார் இந்த தொடரில் வெறும் 6.09 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த குறைந்த ரன் கொடுத்த சாதனையும் படைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *