தோனி ஒரு லெஜன்ட், அவர் செய்வது இந்திய அணிக்கு நன்மை தான் – வேகப்பந்து வீச்சாளர்

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது, இந்திய அணி 197 ரன் சேஸ் செய்து வெற்றி பெற வேண்டி இருந்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்கரர்கள் ரோகித் மற்றும் தவான் ஆகியோர் சற்று துவக்கத்திலேயே (11/2) சொதப்பியதால் இந்திய அணி ஆட்டம் முழுவதும் தடுமாறியது.

பின்னர் கேப்டன் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் அணிக்கு சற்று நம்பிக்கை தரும் வகையில் ஆடினர். இருந்து இந்திய அணியால் அவ்வளவு ரன்னை அடிக்க இயலவில்லை. தோனி இரங்கியதும் செட்டில் ஆகவே 20 பந்துகள் எடுத்துகொண்டார்.  20 பந்துகளுக்கு வெறும் 17 ரன் மட்டுமே எடுத்திருந்த அவர் 21 பந்தில் சிக்சர் அடித்தார். பின்னர் ஒரு வழியயாக கடைசி வரை நின்று 49 ரன் சேர்த்தார் தனக்கு.

இதனை வைத்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் அஜித் அகர்கர் மற்றும் வி.வி.எஸ் லக்ஸ்மனன் ஆகியோர் தோனியை டி20 போட்டிகள் ஆடவேண்டும், மேலும் அந்த இடத்தை  வேறு ஒரு இளம் வீரர்ருக்கு கொடுக்களம் எனக் கூறிவருகின்றனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் வேக்ப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் கூறியதாவது,

‘தோனியின் முந்தைய போட்டிகளில் ரெகார்டை பாருங்கள் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, அணி நிர்வாகத்திற்கும் பிரச்சனை இல்லை.  அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாறஒ அது தற்போது நன்றாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது. அவர் ஒரு லெஜன்ட், இந்திய அணிக்கு என்ன செய்யவேண்டும் என அவருக்குத் தெரியும்.

எனக் கூறினார் புவனேஷ்வர்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. தொடரை தீர்மானிக்கும் 3-வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது. முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, 2-வது போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை.

இதனால் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் இந்தியா விளையாட வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘இந்திய அணி தோல்வியடைந்ததற்காக பந்து வீச்சார்கள் மீது குற்றம் சுமத்தாதீர்கள். எதிரணி சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நாங்கள் சிறப்பாக விளையாடினோம். வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் சிறப்பாக செயல்பட்டோம். மூன்று போட்டிகள் கொண்ட தொடர் மிகவும் சிறியது. முதல் போட்டியில் தோல்வியடைந்தால், அதன்பின் 1-1 என சமநிலைப் பெற்று, தொடரை தீர்மானிக்கும் போட்டியில் விளையாட முடியும்.

ஹர்திக் பாண்டியா மற்றும் வேறு சில வீரர்களை பகுதி நேர பந்து வீச்சாளராக நாம் கருதும் நிலையில் ஐந்தாவது பந்து வீச்சாளர் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். இதுவரை நாம் ஐந்தாவது பந்து வீச்சாளரை மிஸ் செய்யவில்லை. முக்கியமான பந்து வீச்சாளர் விக்கெட் எடுக்காமல், அதிக ரன்கள் விட்டுக்கொடுத்துவிட்டார் என்பதற்காக அவரை நீக்கிவிட்டால், அணியின் காம்பினேசன் குறித்து அதிக அளவில் சிந்திக்க வேண்டும்’’ என்றார்.

Editor:

This website uses cookies.