வீடியோ; தல தோனி ஸ்டைலில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த கவுட்டர் நைல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ஸ்பெஷல் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை கவுட்டர் நைல் அடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வங்காளதேச பிரிமீயர் லீக் டி20 தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. இதில் 7 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்த ரங்க்பூர் ரைடர்ஸ், கொமிலா விக்டோரியன்ஸ், சிட்டகாங் வைக்கிங்ஸ், டாக்கா டைனமைட்ஸ் அணிகள் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறின.

முதல் குவாலிபையரில் கொமிலா விக்டோரியன்ஸ் ரங்க்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் சுற்றில் சிட்டகாங் வைக்கிங்ஸ் அணியை வீழ்த்தி டாக்கா டைனமைட்ஸ் 2-வது குவாலிபையருக்கு முன்னேறியது.
நேற்று 2-வது குவாலிபையர் நடைபெற்றது. இதில் ரங்க்பூர் ரைடர்ஸ் – டாக்கா ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ரங்க்பூர் ரைடர்ஸ் 142 ரன்கள் சேர்த்தது. பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டாக்கா டைனமைட்ஸ் களம் இறங்கியது. அந்த்ரே ரஸல் 19 பந்தில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் விளாச டாக்கா டைனமைட்ஸ் 16.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் கொமிலா விக்டோரியன்ஸ் – டாக்கா டைனமைட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொமிலா விக்டோரியன்ஸ் லெவிஸ், இம்ருல் கெய்ஸ், தமிம் இக்பால் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். டாக்கா டைனமைட்ஸ் அணியில் ஷாகிப் அல் ஹசன், அந்த்ரே ரஸல், சுனில் நரைன் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.
NCN! A first-ball helicopter six, if ya don't mind! @weet_bix | #BBL08 pic.twitter.com/Q492EZmXSD
— KFC Big Bash League (@BBL) February 9, 2019
இதே போல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ் லீக் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கவுட்டர் நைல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஸ்பெஷல் ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை அசால்டாக அடித்த வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.