7 சிக்ஸர்.. 7 பவுண்டரி; காட்டடி அடித்து அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்த ஆரோன் பின்ச்
பிக்பேஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
ஆஸ்திரேலியாவில் டி20 லீக் தொடரான பிக்பேஷ் லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் மற்றும் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிட்னி சிக்ஸர்ஸ் அணி, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் ஆடிய ரெனெகேட்ஸ் அணி, கேப்டன் ஃபின்ச்சின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 175 ரன்களை குவித்தது.
கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை தவிர மற்ற யாருமே சரியாக சீரான வேகத்தில் ஸ்கோர் செய்தார். ஒருமுனையில் ஃபின்ச் நிலைத்து நின்று அடித்து ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன. விக்கெட்டுகள் விழுந்து கொண்டேயிருந்ததால், ஃபின்ச் பெரிதாக அடித்து ஆடவில்லை. லயன் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்துகளில் சிக்ஸர்களை விளாசிய ஃபின்ச், அதன்பின்னர் அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார்.
Aaron Finch in #BBL09 today:
? 109 runs
? 68 balls
? Six fours
? Seven sixespic.twitter.com/nyObW1Pe2U— ICC (@ICC) January 25, 2020
17வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். 18வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார். 19வது ஓவரில் முகமது நபி அவுட்டாக, கடைசி ஓவரில் ஃபின்ச் 109 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் கடைசி 2 ஓவர்களிலும் பெரியளவில் ரன் கிடைக்காமல் போனது. அதிரடியாக ஆடிய ஃபின்ச், 68 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 109 ரன்களை குவித்தார்.
ஃபின்ச்சின் சதத்தால் ரெனெகேட்ஸ் அணி 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது. 176 ரன்கள் என்ற இலக்குடன் சிட்னி சிக்ஸர்ஸ் அணி ஆடிவருகிறது.