Cricket, Bihar, Arunachal Pradesh, Vijay Merchant

அருணாச்சலப்பிரதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 870 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது பீகார் அணி. பாட்னாவில் உள்ள எனர்ஜி மைதானத்தில் நடந்த போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றது பீகார் அணி. அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெட்ரா அணி வெஸ்ட் இண்டீஸ் அணி ஆகும். 1938இல் ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 579 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற பீகார் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்திலேயே அருணாச்சலப்பிரதேச அணியை 83 ரன்னில் சுருட்டியது பீகார் அணி. அதன் பிறகு விளையாடிய பீகார் அணி 7 விக்கெட் இழந்து 1007 ரன்னில் இருக்கும் போது டிக்ளர் செய்தது. பீகார் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பின்னி 380 பந்தில் 358 ரன் அடித்தார், அதில் 36 பவுண்டரிகள் அடங்கும். 4வது வரிசையில் இறங்கிய பேட்ஸ்மேன் ப்ரகாஸஹ் 222 பந்தில் 220 ரன் அடித்தார் மற்றும் தொடக்கவீரர் கிஷோர் 129 பந்தில் 161 ரன் ரன் அசத்தினார்.

Cricket, Bihar, Arunachal Pradesh, Vijay Merchant

மூன்றாவது விக்கெட்டுக்கு பின்னி மற்றும் பிரகாஷ் ஜோடி 67.2 ஓவர்கள் விளையாடி 401 ரன் சேர்த்தார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல், மேலும் மூன்று ஜோடி 100 ரன்னுக்கு மேல் சேர்த்தது. தொடக்கவீரர்களாக காலம் இறங்கிய ராஜேஷ் 54 ரன்னும் அர்னவ் கிஷோர் 161 ரன்னும் அடித்து, முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்தார்கள். 4வது விக்கெட்டுக்கு 109 ரன்னும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 131 ரன்னுக்கு சேர்த்தார்கள்.

9 பந்து வீச்சாளர்களை உபயோகப்படுத்திய அருணாச்சலப்பிரதேச அணி இரண்டு வீரர்கள் மட்டுமே விக்கெட்டை எடுத்தார்கள். சர்மா 4/276 மற்றும் மிலான் டே 1/296 ஆகியோர் விக்கெட்டும் எடுத்து, 200 ரன்னுக்கு மேல் வாரி கொடுத்தார்கள்.

மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய அருணாச்சலப்பிரதேச அணி 54 ரன்னில் ஆல்-அவுட் ஆகியது. 6 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆன நிலையில், நம்பர் 3 பேட்ஸ்மேன் லட்டீர் தமின் 91 பந்துகளில் 31 ரன் அடித்தார். பீகார் அணி தரப்பில் ரேஷு ராஜ் 23 ரன் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுக்க, அவரது பார்ட்னர் சுராஜ் மூன்று விக்கெட்டுகள் எடுத்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *