முன்னாள் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் பாப் ஹோலான்ட் ஆஸ்திரேலியாவில் இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது தற்போது 70 ஆகும்.
அவர் மூளையில் ஏற்ப்பட்ட புற்று நோயால் சிகிச்சைப் பலனின்றி இறந்து போனார். ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் போட்டியில் அவர் காலத்தில் முன்னனி லெக் ஸ்பின்னராக இருந்தவர் பாப் ஹோலான்ட்.
கடந்த வாரம், இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரளந்தார்.
அவருடைய மகன் க்ரேய்க் கூறியதாவது,
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அவருடைய பழைய நணர்களை சந்தித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவருடைய வாழ நாளிலே அந்த தருணங்கள் மிக மகிழ்ச்சியானது எனக் கூறினார்.
அந்த சந்த்திப்பில் அவருக்கு வலி இருப்பதை உணர்ந்து அந்த நிகழ்ச்சியின் இருதியில் என்னிடம் கூறினார். பின்னர் பேஸ்பால் விளையாட்டின் இறுதிப் போட்டியை பார்கச் சென்றோம்.
அவருடைய பேரன் இரு போட்டியில் விளையாடுவதை கண்டு ரசித்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அவருடைய இடுப்பின் வலி மிகவும் அதிகமானதால் அவரை நாங்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
பின்னர் தான் தெரிந்தது அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்ப்பட்டுள்ளது என்று.
பாப்பின் இழப்பு நியூ கேசில் அணி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் அணிகளுக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தி தலைமை செயளாலர் கூறியதாவது,
அவர் ஒரு வீரராக அனைவருக்கும் முன்னுதாரனமாகத் திகழ்ந்தார். நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக அவரது 32 வயதில் தேர்வானார். 80’களில் ஆஸ்திரேலிய அணிக்காக தனது 38 வயதில் ஆடினார்.
அவருக்கு இந்த வருட மார்ச்சில் இருந்து குறைந்த செரிவுடைய மூளை புற்று நோய் இருப்பது கண்டரியப்பட்டது. அந்த மாதத்திலேயே அவருக்கு புற்று நோய் அகற்றும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனாலும், அந்த அறுவை சிகிச்சிய பலனின்றி உயிரிளந்து போனார் பாப்.
ஆஸ்திரேலிய அணியில் அவரது புணைப்பெயர் டிட்சி. 1984ல் தனது 38 வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆஸ்திரேலிய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அதே போன்று, 68 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 228 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.