Cricket, 1983 World Cup, Ranveer Singh, Katrina Kaif, Kabir Khan

1983 உலகக்கோப்பை பற்றிய படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வந்தது, மீண்டும் ஒரு நட்சத்திர பாலிவுட் நடிகை கத்ரினா கைப் அந்த படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார்,

கபீர் கான் இயக்கும் 1983 உலகக்கோப்பை பற்றிய படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை கத்ரினா கைபுக்கு பெரிய வாய்ப்பு வந்திருக்கிறது. நியூயார்க், ஏக் தா டைகர் மற்றும் பான்டோம் என கபீர் கான் இயக்கத்தில் நடித்திருக்கிறார் கத்ரினா கைப்.

“இதுவரை எந்த நடிகைகளையும் கபீர் கான் முடிவு செய்யவில்லை. இரு நடிகைகளும் பேசி தான் வந்துருகிறார்கள். ஒருவர் புதிதாக வந்திருக்கிறார், இன்னொருவரை ரன்வீர் சிங் அழைத்துள்ளார்,” என தகவல்கள் வந்தன.

இந்த படத்தை பற்றி 1983 உலகக்கோப்பையை வெற்றி பெற்ற கேப்டன் கபில் தேவ் பேசினார்.

“இது என்னை பற்றிய படம் இல்லை. இது வாழ்க்கை வரலாறு படமும் இல்லை. இது 1983 உலகக்கோப்பையை பற்றிய படம். என்னை பற்றி அல்ல,” என கபில் தேவ் கூறினார்.

“அந்த உலகக்கோப்பையில் நான் இருந்தே, ஆனால் சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத் ஆகியோரும் விளையாடினார்கள். இதனால், அந்த படத்தில் என்னை போலவே அவர்களையும் காட்டவேண்டும்,” என கபில் தேவ் தெரிவித்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *