இந்தியா-நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் அபாரமாக 53 ரன் வித்யாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
தற்போது இந்த போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களம் இறங்கியது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அபாரமாக ஆடியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் காலின் முன்ரோ 58 பந்துகளில் 109 ரன் குவித்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 196 ரன் குவித்தது.
இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கும் முன்பு லைட்டுகளின் பிரச்சனையாள் சற்று தாமதமாக ஆட்டம் துவங்கியது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர்.
ட்ரென்ட் போல்ட்டின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாத இந்தியாவின் துவக்க ஆட்டக்கரர்கள் அவரிடமே வீழ்ந்தனர். இரண்டாவது ஓவரின் இரனண்டாவது பந்தை வீசிய ட்ர்ன்ட் போல்ட் அற்புதமாக ஒரு இன்ஸ்விங்கரை வீசினார். அதனை சற்றும் எதிர்பாராத சிகர் தவான் எந்த ஷாட் ஆடுவது என குழப்பத்தில் ஒரு மாதிறியாக பேடை வீச, பந்து ஷார்ப்பாக அவரது பேட்டிற்கும் பேடிற்கும் இடையில் சென்று அவரது ஸ்டம்பை பதம் பார்த்தது.
அந்த அற்புதமான இன்ஸ்விங்கர் வீடியோ கீழே :
— Cricket Videos (@VKCrick) November 4, 2017