கொரோனா பயத்தினால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிரபல வீரர்! வருத்தத்தில் ரசிகர்கள்! 1

கொரோனா பயத்தினால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய வீரர்! வருத்தத்தில் ரசிகர்கள்!

கிரிக்கெட் உலகில் வர்ணனையாளராக பணியாற்றிவந்த பிரபல வர்ணனையாளர் பாய்காட், அதிலிருந்து விலகுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து எவ்வித கிரிக்கெட் போட்டியும் நடைபெறாததால் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனா பயத்தினால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிரபல வீரர்! வருத்தத்தில் ரசிகர்கள்! 2

இந்நிலையில், கொரோனாவால் இருந்துவந்த ஊரடங்கிற்கு பிறகு துவங்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடராக இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இருக்கிறது. இந்த தொடரானது வருகிற ஜூலை மாதம் 8 தேதி துவங்கவுள்ளதாக வெளியிடப்பட்ட அட்டவணையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், 14 ஆண்டுகள் வர்ணனையில் பணியாற்றி வந்த முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெஃப்ரி பாய்காட், பிபிசி டெஸ்ட் வர்ணனையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கொரோனா பயத்தினால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிரபல வீரர்! வருத்தத்தில் ரசிகர்கள்! 3
He represented England in 108 Tests and went on to score 8114 runs at an impressive average of 47. He smashed 22 centuries during his Test career. Boycott also represented England in 36 ODI’s

இவர் வெளியிட்ட அறிக்கையில், “அருமையான 14 ஆண்டுகளை அளித்த பிபிசிக்கு நன்றி. கடந்த சீஸனுடன் பிபிசியுடனான என்னுடைய ஒப்பந்தம் முடிவடைந்தது. வர்ணனைப் பணியில் நான் தொடரவே விரும்புகிறேன். ஆனால், தற்போதைய கரோனா வைரஸ் நோய்த் தொற்றுச் சூழலில் உள்ள எதார்த்த நிலையைக் கொண்டு முடிவெடுத்துள்ளேன். கரோனாவால் இரு தரப்பும் எடுத்த முடிவு இது.”

மேலும், “எனக்கு சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த 79-வது வயதில் வர்ணனை செய்வது தவறானதாகும்.” என்று கூறியுள்ளார்.

கொரோனா பயத்தினால் கிரிக்கெட்டில் இருந்து விலகிய பிரபல வீரர்! வருத்தத்தில் ரசிகர்கள்! 4

இவர் இங்கிலாந்து அணிக்காக 108 டெஸ்டுகள், 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மிக சிறந்த வர்ணனையாளராக இருந்துவந்த இவர் திடீரென விலகியுள்ளதால், ரசிகர்கள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான அட்டவணை:

  1. முதல் டெஸ்ட் – ஜூலை 8 முதல் 12 வரை – ஏஜஸ் பவுல் மைதானம்
  2. இரண்டாவது டெஸ்ட் – ஜூலை 16 முதல் 20 வரை – ஓல்ட் ட்ரபோடு மைதானம்
  3. மூன்றாவது டெஸ்ட் – ஜூலை 24 முதல் 28 வரை – ஓல்ட் ட்ரபோடு மைதானம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *