கழற்றிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.... காட்டடி அடித்து எதிரணியை கதி கலங்க வைத்த டூபிளசிஸ் !! 1

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வங்கதேச பிரீமியர் லீக் டி.20 தொடரில் டூபிளசிஸ் சதம் அடித்து மிரட்டியுள்ளார்.

15வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் இன்று துவங்கியது. மொத்தம் 2 நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தின் முதல் நாளான இன்றைய நாளில் சீனியர் வீரர்கள் பலர் ஏலத்திற்கு வந்தனர்.

இதில் ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது பழைய வீரர்களை திருப்பி எடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அம்பத்தி ராயூடு, டூவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, தீபக் சாஹர் என பழைய வீரர்களை அடுத்தடுத்து ஏலத்தில் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சுரேஷ் ரெய்னா, ஷர்துல் தாகூர் மற்றும் டூபிளசிஸ் ஆகியோரை ஏலத்தில் எடுக்காமல் விட்டது.

கழற்றிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.... காட்டடி அடித்து எதிரணியை கதி கலங்க வைத்த டூபிளசிஸ் !! 2

சுரேஷ் ரெய்னா சரியான பார்மில் இல்லாததால் அவரை இதுவரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முன்வரவில்லை, ஷர்துல் தாகூரை 10.75 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சுரேஷ் ரெய்னாவை சென்னை அணி கண்டுகொள்ளாமல் விட்டதை கூட ஏற்றுகொண்ட ரசிகர்கள், டூபிளசியை எடுக்காமல் விட்டதை தற்போது வரை முழுமையாக ஏற்று கொள்ளவில்லை. என்ன ஆனாலும் டூபிளசியை சென்னை அணி எடுத்திருக்க வேண்டும் என சென்னை ரசிகர்கள்சமூக வலைதள பக்கங்களின் மூலம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில், சென்னை ரசிகர்களை மேலும் கடுப்பேற்றும் விதமாக ஒரு சம்பவத்தை இன்றே டூபிளசியும் செய்துள்ளார்.

கழற்றிவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்.... காட்டடி அடித்து எதிரணியை கதி கலங்க வைத்த டூபிளசிஸ் !! 3

ஐபிஎல் தொடரை போன்று வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் கொமிலா அணிக்காக விளையாடி வரும் டூபிளசிஸ், வெறும் 54 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து மிரளவைத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட அதே தினத்தில் டூபிளசிஸ் அதிரடியாக சதம் அடித்து மிரட்டியுள்ளது சென்னை ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியுள்ளது, இருந்த போதிலும் டூபிளசிக்கு சென்னை ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவிக்க தவறவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *