இவரது என்டரியால் இன்றைய போட்டியில் பிராவோ விளையாடுவது சந்தேம் தான் ! ரசிகர்கள் அதிர்ச்சி
14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 13 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.
இன்று (ஏப்.21) இரண்டு ஐபிஎல் லீக் போட்டிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 14வது லீக் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

இதையடுத்து 7.30 மணிக்கு நடைபெறும் 15வது லீக் போட்டியில் தோனி தலமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதுகிறது. இந்த இரு போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் மற்றும் +1.194 நெட் ரன் ரேட் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

எனவே, இன்று நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே தொடக்க வீரர் ருத்ராஜ் விளையாட வாய்ப்புகள் குறைவு என்றே எதிர்பார்க்கப்படுகிறது. என்னென்றால், இவர் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் சொல்லிக் கொள்ளும் அளவில் விளையாடவில்லை. இதனால் இவருக்கு பதிலாக மூத்த வீரர் உத்தப்பா தொடக்க வீரராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி தனது குரான்டைனை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் அணியுடன் இணைந்துள்ளார். இவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை இவர் விளையாடும் பட்சத்தில் இவருக்கு பிராவோ இடம் தருவார். என்றென்றால் வெளிநாட்டு வீரர்களாக மொயின் அலி, சாம் கரன் மற்றும் டூ பிளெசிஸ் ஆகியோர் தங்களது இடத்தை உறுதி செய்துவிட்டார்கள்.
