நெய்மர் ஆட்டத்தால் பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம் 1

உலகக்கோப்பை நாக் அவுட் சுற்று ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் மற்றும் மெக்ஸிகோ அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் நெய்மர் மற்றும் பிர்மினோ அடித்த கோலினால் 2-0 கணக்கில் வென்று அடுத்த சுற்றிற்க்கு முன்னேறியது. Image result for brazil

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள அணிகளில் ஒன்றான முன்னாள் சாம்பியன் பிரேசில் அணி, மெக்சிகோவை சமரா ஸ்டேடியத்தில் இன்று எதிர்கொண்டது.

சுமாரான முதல் பாதி 

Image result for brazilபரபரப்பாக துவங்கிய ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காமல் சமனில் இருந்தது.

 

 

நெய்மர் அசத்தல் 

Neymar

அடுத்து தொடங்கிய இரண்டாவதுபாதி ஆட்டத்தில் 51வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் கோல் அடித்து அசத்தினார். இதனை சமன் செய்ய மெக்சிகோ அணியினர் கடுமையாக முயற்சி செய்தனர்.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ரோபர்டோ 1 கோல் அடிக்க பிரேசில் அணி 2-0 என முன்னிலை வகித்தது. மெக்சிகோ அணியால் கடைசிவரை கோல் அடிக்க முடியவில்லை.

Guillermo Ochoa

இதன்மூலம் மெக்சிகோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வெற்றிபெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *