ஆர்சிபி-க்கு கேப்டன் கோஹ்லின்னா.. துணை கேப்டன் இவர் இருந்தால்தான் சரியாக இருக்கும்! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் நட்சத்திரம்!
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இவர் துணை கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார்.
கரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடத்தமுடியவில்லை. ஐபிஎல் தொடரை ரத்து செய்யாமல் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருந்த உலக கோப்பை தொடர் தள்ளி சென்றதால், அந்த காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது. இந்தியாவில் நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வில்லை. ஆதலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவிருப்பதாக ஐபிஎல் நிறுவனத்தின் சேர்மன் பிரிஜேஷ் படெல் அறிவித்தார்.
அதற்காக துபாய் செல்வதற்கு அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
ஐபிஎல் குறித்து பல முன்னாள் வீரர்கள்கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குறித்தும் அதன் கேப்டன் பொறுப்பு குறித்தும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
“தொடர்ந்து பல ஆண்டுகளாக பெங்களூர் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். இம்முறை அவரது அணியில் அனுபவமிக்க மற்றுமொரு கேப்டனாக ஆரோன் பின்ச் இணைந்திருப்பது மிகவும் பலம் சேர்க்கும்.
விராட் கோலி கேப்டனாக இருக்கும் பட்சத்தில் துணை கேப்டனாக இருந்தால் இம்முறை பெங்களூரு அணி எந்தவித அழுத்தமும் இன்றி கோப்பையை நோக்கி நகரலாம்.” என்றார்.
மேலும் பேசிய பிரட் லி, “இத்தனை ஆண்டுகள் பெங்களூரு அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் இந்த ஆண்டு எவ்வித அழுத்தமும் எடுத்துக் கொள்ளாமல் விராட்கோலி மைதானத்திற்குள் சென்று தனது வழக்கமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினால் போதும். நிச்சயம் அந்த அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.” என்றார்.