சென்னை தான் மாஸ், மும்பை இல்லை பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!! 1

நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 2021 ஐபிஎல் தொடர் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் முன்னேறி மாஸ் காட்டி வருகிறது.

கடந்தாண்டு நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வீதம் சென்னை அணி மிக மோசமாக விளையாடி பிளே ஆஃப் கூட தகுதி பெறாமல் வெளியேறியது,பின் 2021 ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய போதும் தோல்வியை தழுவி ரசிகர்களிடத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.அதன்பின் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்று எந்த ஒரு அணியும் அசைக்க முடியாத ஒரு மிகப்பெரும் அணியாக வலம் வருகிறது.

சென்னை தான் மாஸ், மும்பை இல்லை பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!! 2

வயதான வீரர்களைக் கொண்ட அணி என்று நெட்டிசன்களால் களாய்க்கப்பட்ட சென்னை அணி இந்த ஆண்டு மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து கிரிக்கெட் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது.மேலும் நிச்சயம் இந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை அணி தான் கோப்பையை வெல்லும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி முதலில் மிகவும் தடுமாற்றமாக விளையாடியது, மேலும் அந்த அணியின் துவக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் முதல் சில போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. இருந்தபோதும் சென்னை அணியின் கேப்டன் தோனி அவரின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கினார். இதன் காரணமாக ருத்ராஜ் தன்னம்பிக்கையுடன் மீண்டும் வந்து சிறப்பாக செயல்பட்டு சென்னை அணியில் ஒரு முக்கிய வீரராக வலம் வருகிறார். மேலும் சென்னை அணியின் துவக்க வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய வீரர்களாக திகழ்கின்றனர்.

சென்னை தான் மாஸ், மும்பை இல்லை பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!! 3

மேலும் அந்த அணியின் முதல் மூன்று இடங்களில் களமிறங்கும் வீரர்கள் மிக சிறப்பாக செயல்படுகிறார்கள், குறிப்பாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி தனது மிகச்சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்று தெரிவித்தார்.

மேலும் அந்த அணியின் தூணாக விளங்கும் கேப்டன் தோனி எந்த இடத்தில் களம் இறங்கினாலும் மிக சிறப்பாக செயல்படுவார்.மேலும் அவருடைய தலைமைத்துவம் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்று பிரையன் லாரா தெரிவித்தார்.

சென்னை தான் மாஸ், மும்பை இல்லை பாராட்டிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்!! 4

மேலும் அந்த அணியின் பேக்கப் வீரர்களாக டுவைன் பிராவோ மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக கச்சிதமாக செய்கின்றனர் என்றும் பாராட்டினார். இந்நிலையில் சென்னை அணி நிச்சயம் இந்த ஆண்டு முதல் அல்லது இரண்டாவது இடத்தில் தங்களை தக்கவைத்துக் கொள்ளும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரையன் லாரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *