இந்த அணியை பாக்கவே பாவமா இருக்கு; வருத்தம் தெரிவித்த பிரைன் லாரா !! 1

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மிகவும் அசால்டாக கோப்பையை வென்று உலகின் தலைசிறந்த டி20 அணி என்று பெயர் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் டைட்டில் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

பேட்டிங்கிலும் பௌலிங்கிலும் மிகவும் வலுவான அணி என்றும், நிச்சயம் 2021 ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது நடைபெற்று வருகிற தொடரில் மிகவும் பரிதாபமாக விளையாடி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த அணியை பாக்கவே பாவமா இருக்கு; வருத்தம் தெரிவித்த பிரைன் லாரா !! 2

இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பிரையன் லாரா தெரிவித்ததாவது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு மிகச் சிறப்பாக செயல்படுகிறது,தன்னம்பிக்கையுடன் ஒவ்வொரு போட்டியையும் எதிர்கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மிக சிறப்பாக வெற்றியை பெற்று வருகிறது. ஆனால் இன்னும் சில அணிகள் தன்னம்பிக்கை இல்லாமல் மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மோசமான செயல்பாடு மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று தெரிவித்த அவர், மும்பை அணி எப்படி மற்ற போட்டிகளில் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மேலும் இரண்டு முறை தொடர்ந்து கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் மோசமாக செயல் படுவதை நினைத்து வருத்தப்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அணியை பாக்கவே பாவமா இருக்கு; வருத்தம் தெரிவித்த பிரைன் லாரா !! 3

ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவை தவிர மற்ற எந்த ஒரு பேட்ஸ்மேனும் சிறப்பாக செயல்படவில்லை மேலும் பந்துவீச்சிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா 5 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார் மேலும் அந்த அணியின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தட்டுத் தடுமாறி வருகிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *