எல்லாம் பும்ராஹ் பாய் சொன்னது தான்... முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியை அலறவிட்ட ரகசியத்தை கூறிய ஆகாஷ் தீப் !! 1
எல்லாம் பும்ராஹ் பாய் சொன்னது தான்… முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியை அலறவிட்ட ரகசியத்தை கூறிய ஆகாஷ் தீப்

இந்திய அணிக்காக தனது முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியது மகிழ்ச்சியளிப்பதாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

எல்லாம் பும்ராஹ் பாய் சொன்னது தான்... முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியை அலறவிட்ட ரகசியத்தை கூறிய ஆகாஷ் தீப் !! 2

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் சீனியர் வீரரான பும்ராஹ்விற்கு கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார்.

பும்ராஹ்வின் இடத்தில் களமிறக்கப்பட்ட ஆகாஷ் தீப், தனது துல்லியமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளையும் அசால்டாக கைப்பற்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தனது முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டரை அசால்டாக காலி செய்த ஆகாஷ் தீப்பை முன்னாள் வீரர்கள் பலரும் வியந்து பாராட்டி வரும் நிலையில், பும்ராஹ்வின் ஆலோசனைகள் தனக்கு உதவியாக இருந்ததாக ஆகாஷ் தீப் தெரிவித்துள்ளார்.

எல்லாம் பும்ராஹ் பாய் சொன்னது தான்... முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியை அலறவிட்ட ரகசியத்தை கூறிய ஆகாஷ் தீப் !! 3

இது குறித்து ஆகாஷ் தீப் பேசுகையில், “இந்த போட்டி எனக்கு முதல் போட்டி தான் என்றாலும் நான் எவ்வித பதட்டமும் இல்லாமல் தான் களத்திற்குள் வந்தேன். நான் முன்னதாகவே எனது பயிற்சியாளர்களிடம் பேசி அவர்களது ஆலோசனைகளை பெற்றதால் தான் என்னால் பதட்டம் இல்லாமல் விளையாட முடிந்தது. இந்த நாளில் எனக்கு பல விசயங்கள் சாதகமாக அமைந்தது, ஆனால் இது எல்லாம் எப்படி நடந்தது என்பது எனக்கே தெரியவில்லை. சீனியர் வீரரான பும்ராஹ்விடம் இருந்தும் எனக்கு சில ஆலோசனைகள் கிடைத்தது, அவர் கொடுத்த ஆலோசனைகள் எனக்கு உதவியாக இருந்தது. பும்ராஹ் என்னிடம் சர்வதேச போட்டிகளில் பந்துவீசும் போது எனது லென்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என கூறினார், நான் அவர் சொன்னதை அப்படியே செய்தேன்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *