தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! எதற்காக தெரியுமா? 1

தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! அவர் எதற்காக தெரியுமா?

கால்பந்து போட்டிகளில் இவர் எப்படி வளர்ந்தாரோ அதேபோலவே நானும் கிரிக்கெட் போட்டிகளில் வளர்ந்துவருகிறேன் என வேகப்பந்துவீச்சாளர் பும்ராஹ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக எவ்வித கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. மார்ச் மாதம் இறுதியில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் காலவரையறை இன்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! எதற்காக தெரியுமா? 2

இந்திய அணியின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக உருவெடுத்து வரும் ஜஸ்பிரித் பும்ரா கடந்த இரண்டு ஆண்டுகளில் லிமிட்டட் ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 26 வயதான பும்ராஹ் ஒருநாள் தொடர்களில் அறிமுகமான அடுத்த இரண்டு ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! எதற்காக தெரியுமா? 3

இந்திய அணிக்கு மூன்று விதமான போட்டிகளிலும் ஆடிவரும் பும்ராஹ் அண்மையில் இயான் பிஷப் மற்றும் சான் பொல்லாக் இருவருடனும் நடைபெற்ற உரையாடலில் பங்கு பெற்று அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனது விளக்கத்தை அளித்தார். அப்போது ஐசிசியின் புதிய விதிமுறை குறித்து பேசிய பிறகு, தன்னை ஒரு கால்பந்துவீரருடன் ஒப்பீடு செய்து விளக்கமளித்தார்.

அப்போது பும்ராஹ் கூறியதாவது, “ஐசிசியின் புதியவிதியான பவுலர்கள் எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்பது வருத்தமளிக்கிறது. இந்த புதிய விதியினால் பவுலர்கள் மதிப்பு குறைந்து பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டாக மாறும்.” என்றார்.

தன்னைத்தானே இந்த கால்பந்து வீரருடன் ஒப்பிட்டுக்கொண்ட பும்ராஹ்! எதற்காக தெரியுமா? 4

மேலும் பேசிய அவர், “என்னை சுவீடன் கால்பந்து வீரர் ஜிலாடன் இப்ராகிமோவிச் உடன் ஒப்பிடலாம். இருவரையும் ஆரம்பத்தில் யாரும் மதிக்கவில்லை. பிறகு அவரின் வளர்ச்சியை தற்போதுவரை உலகம் பாராட்டி வருகிறது. துவக்கத்தில் அதேபோலவே என்னையும் சிறந்த பவுலராக உருவாக மாட்டேன் என கணித்தனர். ஆனால், நானோ இப்ராகிமோவிச் போல தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதித்துக்காட்டி வருகிறேன்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *