தாஹிரை காலி செய்து முதலிடம் பிடித்தார்.. புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி !!

தாஹிரை காலி செய்து முதலிடம் பிடித்தார்.. புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி

சர்வதேச ஒருநாள் அரங்கிற்கான ஐ.சி.சி.,யின் புதிய தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வரலாறு படைத்தது.

இரு அணிகள் இடையேயான டி.20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று, டி.20 தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் துவங்கியுள்ள நிலையில், ஒருநாள் அரங்கிற்கான ஐ.சி.சி.,யின் புதிய தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டிலும் தனது அபார பந்து வீச்சு மூலம் தென் ஆப்ரிக்காவை திணறடித்த இந்திய அணியின் பும்ராஹ், தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாஹிரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

பும்ராஹ் 787 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், ரசீத் கான் 787 ரன்கள் புள்ளிகள் பெற்று இடத்திலும் உள்ளனர். அடுத்தடுத்து முறையே டிரண்டெ பவுல்ட், ஹசீல்வுட், ஹசன் அலி ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.

ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை;

பும்ராஹ் – 787

ரசீத் கான் – 787

பொல்ட் – 729

ஹசீல்வுட் – 714

ஹசன் அலி – 711

இது தவிர இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்திய அணி சார்பில் சாஹல் 667 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.

இதே போல் சர்வதேச ஒருநாள் அரங்கிற்கான பேட்ஸ்மேன்கள் பட்டியலில், இந்திய கேப்டன் கோஹ்லி 909 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 900 புள்ளிகளை கடந்ததன் மூலம் ஐ.சி.சி., தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் கோஹ்லி பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக டிவில்லியர்ஸ் 844 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், டேவிட் வார்னர் 823 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் அரங்கில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை;

கோஹ்லி – 909

டிவில்லியர்ஸ் – 844

வார்னர் – 823

பாபர் அசாம் – 813

ஜோ ரூட் – 808

இந்த பட்டியலின் இந்திய அணியின் ஷிகர் தவான் 769 புள்ளிகள் பெற்றும் 10வது இடத்தில் உள்ளார். இவர்களை தவிர வேறு எந்த இந்திய வீரரும் முதல் 10 இடத்திற்குள் இல்லை.

Mohamed:

This website uses cookies.