விலகினார் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ; மாற்று வீரர் யார் ? 1

டி20 உலக கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகுகிறார் ஜஸ்பிரீத் பும்ரா.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக பந்துவீச்சில் திகழ்ந்து வந்தவர் ஜஸ்பிரீத் பும்ரா. ஐபிஎல் தொடருக்கு பிறகு காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். ஆசிய கோப்பை தொடர் முடிவுற்றவுடன் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் தேர்ச்சி பெற்றதால், டி20 உலக கோப்பை செல்லும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது.

டி20 உலககோப்பைக்கு முன்னதாக நடைபெறும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடன் டி20 தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியா அணியுடன் டி20 தொடரில் நன்றாக விளையாடி வந்தார். அதற்கு அடுத்ததாக நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்கேற்க இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக, முதல் டி20 போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், முதுகு பகுதியில் வலி இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியிருந்தார்.

விலகினார் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ; மாற்று வீரர் யார் ? 2

பும்ராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரால் விளையாட முடியாது ஓய்வு தேவை என கூறினர். அதன் காரணமாக, தென்னாப்பிரிக்க அணியுடன் மீதமிருந்த டி20 போட்டிகளில் இருந்து விலகினார். அதேநேரம் டி20 உலக கோப்பையில் இருந்து விலகுகிறார் என எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. முழு பரிசோதனை முடிந்த பிறகு தெரிவிக்கப்படும் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறிவிட்டார்.

அதற்கு ஏற்றார் போல அக்டோபர் மூன்றாம் தேதி பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு வெளியிட்ட அறிக்கையில் பும்ராவிற்கு காயம் சற்று தீவிரமாக இருக்கிறது. அவரால் டி20 உலக கோப்பையில் விளையாட முடியாது; அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமா? இல்லை வேண்டாமா? என்பது பற்றின அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என குறிப்பிட்டனர்.

விலகினார் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்... அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ; மாற்று வீரர் யார் ? 3

இதன் அடிப்படையில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், பும்ரா டி20 உலக கோப்பையில் பங்கேற்க மாட்டார். அவருக்கான மாற்று வீரர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Leave a comment

Your email address will not be published.