சர்வதேச டி.20 தரவரிசை; இந்திய அணிக்கு பிரகாசமாக காத்திருக்கும் முதலிட வாய்ப்பு !! 1
சர்வதேச டி.20 தரவரிசை; இந்திய அணிக்கு பிரகாசமாக காத்திருக்கும் முதலிட வாய்ப்பு

அயர்லாந்து அணிக்கு  எதிரான டி.20 தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில் சர்வதேச டி.20 தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறும் வாய்ப்புகள் உள்ளது.

இங்கிலாந்து செல்லும் கோலி தலைமையிலான இந்திய அணி, 3 டி-20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி, ஜூலை 3ம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது.

சர்வதேச டி.20 தரவரிசை; இந்திய அணிக்கு பிரகாசமாக காத்திருக்கும் முதலிட வாய்ப்பு !! 2
Virat Kohli captain of India celebrates wicket of David Warner captain of Australia during the 2nd T20 International match between India and Australia held at the Barsapara Cricket Ground, Guwahati on the 10th . October 2017Photo by Prashant Bhoot / BCCI / SPORTZPICS

அதற்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக (ஜூன் 27, 29ம் தேதி) இரண்டு டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் டப்லினில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி சர்வதேச டி-20 தரவரிசையில் 123 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் 13 டி-20 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் இங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் மோதும் தொடர் ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு தொடர், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோது தொடர் என மூன்று தொடர்கள் நடக்கவுள்ளது.

சர்வதேச டி.20 தரவரிசை; இந்திய அணிக்கு பிரகாசமாக காத்திருக்கும் முதலிட வாய்ப்பு !! 3

இதில் இந்திய அணி நம்பர்-1 இடத்தை பிடிக்க, அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து அணிக்கும் நம்பர்-1 வாய்ப்பு உள்ளது. இதே போல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் தற்போது எட்டாவது இடத்தில் உள்ள இந்திய கேப்டன் விராட் கோலி (670 புள்ளிகள்) தனது நம்பர்-1 இடத்தை மீண்டும் பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *