பழைய பன்னீர்செல்வமாக மாறிய சஞ்சு சாம்சன்... ஹைதராபாத் பவுலர்களை பொளந்துகட்டிய பட்லர்-சாம்சன் ஜோடி.. ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு! 1

2ஆவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தது சாம்சன்-பட்லர் ஜோடி. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பந்ததாடி 20 ஓவர்களில் 214 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதானமான சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்று வரும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

பழைய பன்னீர்செல்வமாக மாறிய சஞ்சு சாம்சன்... ஹைதராபாத் பவுலர்களை பொளந்துகட்டிய பட்லர்-சாம்சன் ஜோடி.. ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு! 2

வழக்கம்போல ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓபனிங் இறங்கிய யஷஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரில் ஜெய்ஸ்வால் அதிரடியாக துவங்கினார். முதல் விக்கெட்டிற்கு 5 ஓவர்களில் 54 ரன்கள் சேர்த்தது ஓபனிங் ஜோடி. இதில் ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் உட்பட 35 ரன்கள் அடித்து அவுட்டானார்.

2ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சாம்சன்-பட்லர் இருவரும் கிடைத்த அதிரடியான துவக்கத்தை அப்படியே எடுத்துச் சென்றனர். அதுவரை 20 பந்துகளில் 20 ரன்கள் அடித்திருந்த பட்லர், கியரை மாற்றி 32 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார்.

பழைய பன்னீர்செல்வமாக மாறிய சஞ்சு சாம்சன்... ஹைதராபாத் பவுலர்களை பொளந்துகட்டிய பட்லர்-சாம்சன் ஜோடி.. ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு! 3

மறுபக்கம் ஸ்பின்னர்களை சிக்ஸர்களில் டீல் செய்தார் சஞ்சு சாம்சன். சில போட்டிகளுக்கு பிறகு சஞ்சு சாம்சனிடம் இருந்து மீண்டும் அதிரடியை பார்க்க முடிந்தது. இரண்டாவது விக்கெட்டிற்கு சாம்சன்-பட்லர் ஜோடி 138 ரன்கள் குவித்தது.

பழைய பன்னீர்செல்வமாக மாறிய சஞ்சு சாம்சன்... ஹைதராபாத் பவுலர்களை பொளந்துகட்டிய பட்லர்-சாம்சன் ஜோடி.. ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு! 4

59 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் அடித்து போட்டியின் 19ஆவது ஓவரில் புவனேஷ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார் பட்லர். சதமடிக்கும் நல்ல வாய்ப்பையும் நழுவவிட்டார்.

ராஜஸ்தான் அணி 230 ரன்கள் வரை எட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது, 18ஆவது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே நடராஜன் விட்டுக்கொடுத்ததால் ரன்குவிக்கும் வேகம் குறைந்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்து 200 ரன்களை கடந்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

பழைய பன்னீர்செல்வமாக மாறிய சஞ்சு சாம்சன்... ஹைதராபாத் பவுலர்களை பொளந்துகட்டிய பட்லர்-சாம்சன் ஜோடி.. ராஜஸ்தான் 214 ரன்கள் குவிப்பு! 5

இறுதிவரை அவுட்டாகாமல் அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், 5 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உட்பட 38 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார்.

வழக்கமாக குறைந்த எக்கானமியில் பந்துவீசி வரும் மயங்க் மார்க்கண்டே இப்போட்டியில் 4 ஓவர்களில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 51 ரன்கள் விட்டுகொடுத்தது. ஹைதராபாத் அணிக்கு ஏமாற்றமாக அமைந்தது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *