எங்கக்கூட ரெண்டு 'டே-நைட் டெஸ்ட்' ஆடுமா இந்தியா? - வேண்டுமென்றே சீண்டும் ஆஸ்திரேலியா 1

இந்திய அணி எங்களுடன் குறைந்தது இரு பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களிலாவது விளையாட வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-இடம் கோரிக்கை விடுத்துள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடிப்படையில், இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் ஆடி 360 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

எங்கக்கூட ரெண்டு 'டே-நைட் டெஸ்ட்' ஆடுமா இந்தியா? - வேண்டுமென்றே சீண்டும் ஆஸ்திரேலியா 2

வருகிற ஜனவரி மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடவிருக்கிறது.

2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய அணி அடிலெய்ட், பிரிஸ்பேன், பெர்த் ஆகிய மைதானங்களில் ஏதேனும் இரண்டில் இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் இரு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது.

எங்கக்கூட ரெண்டு 'டே-நைட் டெஸ்ட்' ஆடுமா இந்தியா? - வேண்டுமென்றே சீண்டும் ஆஸ்திரேலியா 3

அந்த இரண்டு டெஸ்ட் போட்டியையும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளாக நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ இடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐயுடன் ஜனவரியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டால், இரு பகலிரவு டெஸ்டுகள் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் என்கிற பெருமையும் இதற்குக் கிடைக்க உள்ளது.

எங்கக்கூட ரெண்டு 'டே-நைட் டெஸ்ட்' ஆடுமா இந்தியா? - வேண்டுமென்றே சீண்டும் ஆஸ்திரேலியா 4

சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது இந்திய அணி. இதையடுத்து இந்தியாவில் இனி நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *