ஸ்லெட்ஜிங் செய்ய கற்றுக் கொள்கிறேன்: புஜாரா சொல்கிறார்

இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு புஜாரா (133), ரகானே (122) ஆகியோரின் பேட்டிங் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த போட்டிக்குப்பின் இருவரும் பிசிசிஐ டி.வி.க்கு பேட்டியளித்தனர்.

அப்போது ஸ்லெட்ஜிங் குறித்து புஜாரா கூறுகையில் ‘‘தற்போது நான் ஸ்லெட்ஜிங்கை தொடங்கியுள்ளேன். ஸ்லெட்ஜிங் குறித்து தற்போது வரை கற்றுக்கொண்டு வருகிறேன். சில சமயங்களில் ஸ்லெட்ஜிங் தேவை என்றால், அதை வெளிப்படுத்த வேண்டும்.

ஏனென்றால், சில சமயம் பந்து வீச்சாளர்களுக்கு உதவி தேவை. அப்போது பீல்டராக நாம் பேட்ஸ்மேன்களிடம் பேச்சுக் கொடுத்து ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடலாம். சில சமயம் இது தேவை என்றபோது, அதை ஏன் செய்யக்கூடாது?’’ என்றார்.

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி எப்போதும் ஆக்ரோஷமாக இருப்பார். அவர் பேட்ஸ்மேன்களை சீண்டுவதில் வல்லவர். ஆனால், துணைக் கேப்டன் ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் மிகவும் அமைதியானர்கள். அவர்கள் மைதானத்தில் எந்தவொரு பிரச்சினையிலும் ஈடுபடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.