பால் டேம்பெரிங் குறித்து பேன்கிராஃப்ட் அளித்த புதிய பேட்டி! மீண்டும் பரபரப்பு!
2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடினர். அதில் ஒரு போட்டியில் இளம் வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தினர். அவ்வாறு சேதப்படுத்துவது ஐசிசி விதி முறையின் படி தண்டனைக்குரியதாகும். அது சம்பந்தமாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவரிடம் விசாரணை மேற்கொண்டது. அதில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் தொடர்பு உள்ளது என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரும் 9 மாதங்கள் கிரிக்கெட் போட்டி விளையாடக்கூடாது என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தண்டனை அளித்தது.

தண்டனை காலம் முடிந்த பின்னர் அனைவரும் தற்போது சகஜமாக விளையாடி வரும் வேளையில், பேன்கிராஃப்ட் தற்போது மீண்டும் அளித்துள்ள ஒரு பேட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நான் பந்தே சேதப்படுத்துவது அனைத்து ஆஸ்திரேலிய பவுலர்களுக்கும் தெரியும்
இங்கிலாந்தில் உள்ள கவுண்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டுர்ஹாம் அணிக்காக பேன்கிராஃப்ட் விளையாடி வருகிறார். சமீபத்தில் செய்தியாளர்கள் மத்தியில் ஒரு பேட்டியில் அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சகஜமாக இவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. பந்தை சேதப்படுத்தியது காரணமாக உங்களுக்கு அளித்த தண்டனையை குறித்தும் அதில் இருந்து நீங்கள் எப்படி மனதளவில் மீண்டு வந்தீர்கள் என்றும் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், நான் பந்தை சேதப்படுத்தியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த போட்டியில் நான் பந்தை சேதப்படுத்த போவதற்கு முன்னதாகவே இந்த செய்தி அனைத்து ஆஸ்திரேலிய அணியில் விளையாடும் பவுலர்களுக்கும் தெரியும் என்று பரபரப்பாக கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு அந்த சம்பவம் நடந்தவுடன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் இவரிடமும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரிடமும் இந்த சம்பவத்திற்கு பின்னால் வேறு யாரேனும் உள்ளனரா என்று பலதடவை கேட்டது. அதற்கு இந்த மூவரும் நாங்கள் மட்டும்தான் இந்த சம்பவத்தில் காரணம் என்று திட்டவட்டமாகக் கூறினார். ஆனால் தற்பொழுது பேன்கிராஃப்ட் கூறியுள்ள இந்த செய்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தை கோபப்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி
தற்பொழுது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு ஒரு வார்னிங் விடுத்துள்ளது. அந்தப் போட்டியில் விளையாடிய அனைத்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கும் விரைவில் ஒரு விசாரணை அமைக்க உள்ளதாக கூறியுள்ளது.

அந்த விசாரணைக்கு முன்பாகவே தானாக முன்வந்து இதுகுறித்து தெரிந்தவர்கள் அல்லது உடந்தையாக இருந்தவர்கள் தங்களுடைய தவறை தெரிவிக்க ஆஸ்திரேலிய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி தானாகவே முன்வந்து தெரிவிக்கும் வண்ணம் தண்டனை கம்மியாக இருக்கும். ஒருவேளை நிர்வாகம் கண்டு பிடித்தால் தண்டனை மிக மோசமாக இருக்கும் என்பதையும் கூறி விட்டது. அந்தப் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லியோன் மற்றும் மிச்செல் மார்ஸ் ஆகியோர்கள். எனவே இவர்கள் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை தண்டனை வழங்கப்பட்டாலும் அந்த தண்டனை மிக மோசமானதாக இருக்கும், ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டு விளையாட முடியாமல் போகவும் வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் வீரர்கள் தானாக முன்வந்து ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தடை விதிக்கும் வண்ணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் செயல்படும் என்றும் தெரியவந்துள்ளது.