இந்த பையனும் தல தோனி மாதிரி தான்... சரியான வாய்ப்பு கொடுங்க கண்டிப்பா மாஸ் காட்டுவான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 1

ரிஷப் பண்டிடம் தோனியின் ஸ்டைல் சிறிதளவு உள்ளது என்று R.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்த பையனும் தல தோனி மாதிரி தான்... சரியான வாய்ப்பு கொடுங்க கண்டிப்பா மாஸ் காட்டுவான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 2

இருந்தபோதும், இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்டை விளையாட வைக்காமல் தினேஷ் கார்த்திக்கிர்க்கு முன்னுரிமை கொடுத்து விளையாட வைத்துள்ளது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

 

தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி விளையாடி வருவதால் ரிஷப் ஓரம் கட்டப்பட்டிருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பையனும் தல தோனி மாதிரி தான்... சரியான வாய்ப்பு கொடுங்க கண்டிப்பா மாஸ் காட்டுவான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 3

ஆனால் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சூழலுக்கு ஏற்றவாறு அணியை தேர்வு செய்து விளையாட வைக்கிறோம் ரிஷப் பண்ட்டை கழட்டிவிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் பில்டிங் பயிற்சியாளர் R.ஸ்ரீதரிடம் நிகழ்ச்சி ஒன்றில் ரிஷப் பன்ட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த ஸ்ரீதர், ரிஷப் பண்டிடம் நாம் சிறிதளவு தோனியின் ஸ்டைலை பார்க்க முடியும் என்று பதில் அளித்திருந்தார்.

இந்த பையனும் தல தோனி மாதிரி தான்... சரியான வாய்ப்பு கொடுங்க கண்டிப்பா மாஸ் காட்டுவான்; முன்னாள் வீரர் சொல்கிறார் !! 4

இதுகுறித்து ஸ்ரீதர் தெரிவித்ததாவது, “ரிஷப் பண்டிடம் சிறிதளவு தோனியின் ஸ்டைல் உள்ளது, ஒருவரை பார்த்து அவரைப் போல் உருவாக வேண்டும் என்று வளர்ந்தால், அவருடைய பண்பு நம்மிடம் ஒட்டிக் கொள்ளும்.நாம் ரிஷப் பண்டிடம் தோனியின் சில பண்பை காணலாம், ஏனென்றால் ரிஷப் பண்ட் தோனி போன்ற ஒரு ஜாம்பவானை பார்த்து வளர்ந்த ஒரு வீரர்.இவர் மற்ற வீரர்களிடம் மிகவும் நட்புறவாகவும், சிரித்த முகத்துடனும் பழகுகிறார். மைதானத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவும் மைதானத்திற்கு வெளியில் அமைதியாகவும் இருக்கிறார்.ரிஷப் பண்ட், மற்ற விளையாட்டுகளையும் மிகவும் விரும்புவார்” என்று ஸ்ரீதர் ரிஷப் பண்ட் குறிப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *