நம்மளால் எவ்வாறு இன்னொரு சச்சின் டெண்டுல்கரை காண முடியாதோ அதே போன்று இன்னொரு தோனியை பெறமுடியாது மனம் திறக்கிறார் ரவி சாஸ்திரி…

மகேந்திர சிங் தோனி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் கேப்டனும் ஆவார்.இவர் போண ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்திய அணி எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது அதன்பின் சர்வதேச கிரிக்கெட் தொடரில் தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

இந்திய அணியில் ஜாம்பவானான தோனி எவராலும் சாதிக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் ஐசிசி இல் நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை,50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்திலும் கோப்பையை வென்றார்.
தோனி ஆடுகளத்தில் இருக்கிறார் என்றால் அனைவருக்கும் ஒரு நம்பிக்கையும் சந்தோசமும் தெரியும் அளவிற்கு அசாதாரணமான வீரராகவே திகழ்ந்தார்.

இவரின் நேர்த்தியான முடிவும் இவருடைய ஆக்ரோஷமான விளையாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இவருடைய கேப்டன்ஷிப் குறித்து பேசாத கிரிக்கெட் வல்லுனர்களோ வீரர்களோ, ரசிகர்களோ கிடையாது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தோனிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது, கிரிக்கெட் வரலாற்றில் தோனி அனைவராலும் மறக்க முடியாத வீரராக திகழ்கிறார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்தியாவின் தலைமை கோட்ச்சும் மான ரவி சாஸ்திரி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் தோனியின் இடத்தை பூர்த்தி செய்வது இயலாத காரியமாக திகழும். எப்படி நம்மால் இன்னொரு கபில் தேவையும் மற்றும் இன்னொரு சச்சின் டெண்டுல்கரையும் இனி காண முடியாதோ அதே போன்று தோனியின் இடத்தை பூர்த்தி செய்வது என்பது முடியாத காரியம் ஆகும்.