தற்போது இளம் வயதில் இந்திய அணி ரசிகர்கள் அனைவரின் மத்தியிலும் பிரித்வி ஷா இடம் பிடித்துவிட்டார். அண்டர் 19 உலக கோப்பை தொடரை ஒரு வீரராக அதேசமயம் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். அதன் பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்புகள் அவருக்கு நிறைய வந்தது
அதில் சற்று அவர் சொதப்பினார் குறிப்பாக கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் சரியாக விளையாடாத காரணத்தினால் அதற்கு அடுத்து அடுத்து அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதன் பின்னர் மீண்டும் அவர் தன்னுடைய திறமையை இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் நிரூபித்தார். அந்த தொடரில் அவர் 827 ரன்கள் குவித்து அனைத்து இந்திய ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

பின்பு அதே ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு காண்பித்தார். இதன் காரணமாக இந்திய அணியில் மீண்டும் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. தற்போது இலங்கை அணிக்கு எதிராக அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பும் அவருக்கு தற்போது வந்துள்ளது.
அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் இவரை நம்பி இந்திய நிர்வாகம் வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் பிரித்வி ஷா விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விரேந்திர சேவாக் போல தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தற்பொழுது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர்களைப் போலவே அதிரடியாக விளையாடினால் மட்டும் பத்தாது
பிரித்வி ஷா நன்கு அதிரடியாக விளையாடும் ஆற்றல் பெற்றவர். அவரிடம் சென்று சற்று வித்தியாசமாக பொறுமையாக விளையாட வேண்டும் என்று கூறுவது அடிப்படையில் மிகத் தவறான விஷயம். அதே நேரத்தில் அதிரடியாக விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் வீரேந்திர சேவாக் போல இவர் விளையாடுகிறார் என்று அனைவரும் கூறும் வகையில் விளையாடி வருவது பாராட்டுக்குரியது. இருப்பினும் அவர் இவர்கள் இருவரும் போலவே சற்று நிதானமாக விளையாட வேண்டும்.

குறிப்பாக விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்து மைதானத்தில் 180 ரன்கள் குவித்தார். அந்த காலகட்டத்தில் 225 ரன்கள் என்பதே ஒரு நாள் போட்டிகளில் சராசரி ஸ்கோர் ஆக இருந்தது. மறுபக்கம் வீரேந்திர சேவாக் டெஸ்ட் போட்டியில் முச்சதம் குவித்து அசத்திய வீரர். மேலும் தன்னுடைய டெஸ்ட் கேரியரை பெரும்பாலும் 50 அவரேஜ்ஜுக்கு மேல் வைத்து முடித்தவர். எனவே பிரித்வி ஷா இவர்களைப் போல அதிரடியாக விளையாடி நாள் மட்டும் பத்தாது.
இவர்கள் இருவரும் எப்படி தொடர்ச்சியாக நிதானமாக ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினார்களோ அதேபோல பிரித்வி ஷா இந்திய அணிக்கு இனி வரும் மாதங்களில் தொடர்ச்சியாக மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படி வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியில் நீண்ட காலம் இவரால் நீடிக்க முடியும் என்றும் இறுதியாக சல்மான் பாட்டு கூறி முடித்தார்.