இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ராகுல் சஹர் மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் மிக சிறப்பாக பந்து வீசினார்கள். அதில் சக்காரியா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் மறுமுனையில் ராகுல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். உலக கோப்பை டி20 தொடர் நடைபெறுவதற்கு முன்பாக நடைபெறும் கடைசி சர்வதேச தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து வருகிறது அதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. எஞ்சியுள்ள இரண்டு போட்டிகள் முடிவடைந்தவுடன், இந்திய அணி இதற்குப் பின்னர் விளையாடப் போவது உலக கோப்பை டிரணிடர் மட்டுமே. இடையே இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாட இருப்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் தற்போது ஒரு நல்ல ஆட்டம் காரணமாக சக்காரியாவை உலக கோப்பை டி20 தொடரில் விளையாட வைக்க முடியாது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தற்பொழுது கூறியிருக்கிறார்.
ஒரு நல்ல ஆட்டம் அவரைக்கு உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்று தந்து விடாது
இந்திய அணியில் இதற்கு முன்னர் சில ஆட்டங்களில் விளையாடி உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்புகளை பெற்ற வீரர்கள் இருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் தினேஷ் மொங்கியா விளையாடினார் ஆனால் அவர் அந்த தொடரில் சொதப்பியது நம் அனைவருக்கும் தெரியும். அதைப்போலவே 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் விஜய் சங்கர் நம் அனைவரையும் ஏமாற்றினார். எனவே இந்திய அணி இதில் சற்று உறுதியாக இருக்க வேண்டும்.
சக்காரியா வெறும் 10 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அவருக்கு வயது மற்றும் அனுபவம் மிக குறைவு. எனவே ஒரு நல்ல ஆட்டம் விளையாடி விட்டு அதன் மூலமாக உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் அளவுக்கு அவர் தகுதி அடைந்தவராக நாம் எடுத்துக்கொள்ள முடியாது என்று ஆகாஷ் சோப்ரா தற்போது கூறியுள்ளார்.

இந்தியா நிர்வாகம் சற்று நன்கு ஆராய்ந்து வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
உலக கோப்பை டி20 தொடருக்கான 15 வீரர்கள் பட்டியலில் இடம்பெறும் அனைத்து வீரர்களும் அனுபவம் வாய்ந்த அதே நேரத்தில் தொடர் முழுவதும் பங்குபெற்று விளையாடும் அளவுக்கு பிரசித்தி பெற்ற வீரர்களாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு சக்காரியா புவனேஸ்வர் குமார் மற்றும் தீபக் சஹர் போன்று பந்துவீசும் பந்துவீச்சாளர் கிடையாது. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அனுபவம் குறைந்த வீரர்களை உலக கோப்பை டி20 தொடருக்கு அழைத்துச் செல்வது சரியாக இருக்காது.
இந்திய நிர்வாகம் உலக கோப்பை டி20 தொடர் அதற்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது சற்று நிதானமாக நல்ல திறமையான அதே சமயம் நல்ல அனுபவம் வாய்ந்த வீரர்களை தேர்ந்தெடுப்பது தான் இந்திய அணிக்கு நல்லது என்று இறுதியாக ஆகாஷ் சோப்ரா கூறி முடித்தார்.