வீடியோ: ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்த கேட்ச்... கால் தரையிலேயே இல்ல... மிரட்டிவிட்ட ஸ்டீவ் ஸ்மித்! 1

ஹர்திக் பாண்டியா அடித்த பந்தை ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், அசாத்தியமாக கேட்ச் எடுத்து ஒட்டுமொத்த இந்தியாவையே ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை கீழே உள்ளது.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

வீடியோ: ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்த கேட்ச்... கால் தரையிலேயே இல்ல... மிரட்டிவிட்ட ஸ்டீவ் ஸ்மித்! 2

அதைத்தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறார்.

இதனையடுத்து துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். சுப்மன் கில் முதல் ஒருநாள் போட்டியில் எப்படி மிச்சல் ஸ்டார்க் பந்தில் மார்னஸ் லபுஜானே வசம் பிடிபட்டு ஆட்டம் இழந்தாரோ, அதேபோல இப்போட்டியிலும் அச்சுபிசகாமல் மிச்சல் ஸ்டார்க் பந்தில் லபுஜானே வசம் பிடிபட்டு வெளியேறினார்.

வீடியோ: ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்த கேட்ச்... கால் தரையிலேயே இல்ல... மிரட்டிவிட்ட ஸ்டீவ் ஸ்மித்! 3

அடுத்ததாக ஸ்டார்க் பந்தை அடிக்க முயற்சித்த ரோகித் சர்மா, ஸ்லிப்பில் ஸ்டீவ் ஸ்மித் வசம் பிடிபட்டு வெளியேறினார். உள்ளே வந்த அடுத்த பந்திலேயே சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட் ஆனார். இவர் முதல் ஒருநாள் போட்டியில் எப்படி மிட்ச்சல் ஸ்டார்க்கிடம் முதல் பந்திலையை எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினாரோ, மீண்டும் ஒருமுறை அதே தவறை செய்து அதேபோல எல்பிடபிள்யூ முறையில் வெளியேறியுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு கடைசி வரை நின்று நம்பிக்கை கொடுத்து வெற்றி பெறவைத்த கேஎல் ராகுல், 9 ரண்களுக்கு வெளியேறினார். இதனால் 48 ரன்களுக்கு 4  விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதள பாதாளத்திற்கு சென்றது.

அதற்கு அடுத்ததாக உள்ளே வந்த ஹார்திக் பாண்டியா, விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீன் அபாட் பந்தில் அடிக்க முயற்சித்தபோது, ஸ்டீவ் ஸ்மித் அபாரமான கேட்ச் எடுத்து, அனைவரையும் மிரளவைத்து, ஹர்திக் பாண்டியாவை ஆட்டமிழக்க செய்தார். அசாத்தியமான கேச்சை எடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவே ஆடிப்போனது என்றாலும் மிகையாகாது. ஏனெனில் அவ்வளவு சிறப்பாக இருந்தது .

வீடியோ: ஒட்டுமொத்த இந்தியாவையே கதிகலங்க வைத்த கேட்ச்... கால் தரையிலேயே இல்ல... மிரட்டிவிட்ட ஸ்டீவ் ஸ்மித்! 4

அபாரமான கேட்ச் எடுத்த ஸ்டீவ் ஸ்மித் வீடியோ:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *