சாம்பியன்ஸ் ட்ராபி 2017: அரையிறுதியில் தோற்ற இங்கிலாந்தை கலாய்த்த கிறிஸ் கெய்ல்

தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து வருகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் உள்ள முதல் எட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.

ஜூன் 12ஆம் தேதி பகுதிச்சுற்று போட்டி முடிந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

ஜூன் 14ஆம் தேதி கார்டிப்ப் மைதானத்தில் முதல் அரையிறுதி போட்டி நடந்தது. முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டியில் இங்கிலாந்தை வெளுத்துவாங்கி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது பாகிஸ்தான். சொந்த மண்ணில் மண்ணை கவ்விய இங்கிலாந்து அணியை மேற்கிந்திய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் கலாய்க்க தொடங்கினார்.

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு தெறி பார்மில் இருந்தது இங்கிலாந்து அணி. இதனால், இந்த சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கு என அனைவரும் நினைத்தார்கள். 2015 உலக கோப்பை லீக் போட்டியுடன் ஊருக்கு கிளம்பியதில் இருந்து, ஒருநாள் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது இங்கிலாந்து அணி.

2015 உலக கோப்பைக்கு பிறகு 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 23 முறை 300க்கு மேல் அடித்துள்ளனர். அதே சமயத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 444-ரன் அடித்து ஒருநாள் போட்டிகளில் அடித்த ஸ்கோர் அடித்த என பெருமையை இங்கிலாந்து பெற்றது. கடைசி உலக கோப்பையில் இருந்து அவர்களின் பதில் ஐந்து அதிக ஸ்கோர்களை அடித்துள்ளனர்.

அதே போல் தான் இந்த சாம்பியன்ஸ் டிராபியை அவர்கள் தொடங்கினர். முதல் போட்டியில் 300+ ரன் சேஸ் செய்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் வெற்றி பெற்றது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணியாக மட்டும் இல்லாமல், பகுதி போட்டிகளில் ஒரு முறை கூட தோற்காத அணியாகவும் இருந்தது.

ஆனால், முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வி பெற்று இந்த தொடரை விட்டு வெளியேறியது. டாஸ் முதல் இங்கிலாந்தின் ராசி செல்லுபடி ஆகவில்லை. முதல் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவெடுத்தது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 211 ரன்னுக்கு சுருண்டது இங்கிலாந்து.அந்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் 38வது ஓவரில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அந்த தோல்விக்கு பிறகு வலைத்தளங்களில் இங்கிலாந்து அணியை அனைவரும் கலாய்த்து கொண்டிருந்தனர். இதில், மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்லும் கலந்து கொண்டார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.