முழுங்கால் காயத்தால் அவதி படும் இலங்கை அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் சமரா கபுகெதரா இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 26-வயதான தனுஸ்கா குணதிலகா அணியில் இடம் பிடித்தார்.
இந்தியாவுக்கு எதிரான முக்கிய போட்டிக்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கபுகெதராவுக்கு காயம் ஏற்பட்டது.
“பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கபுகெதராவுக்கு காயம் ஏற்பட்டது, அவரை ஸ்கேன் எடுக்க அனுப்பினோம். தேவை பட்டால் அவருக்கு பதிலாக இன்னொரு வீரரை அணியில் சேர்ப்போம்,” என மத்தியூஸ் கூறினார்.
கடந்த இரண்டு வருடமாக ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடாத கபுகெதரா சாம்பியன்ஸ் டிராபிக்கான இலங்கை அணியில் இடம் பிடித்தார். ஆனால், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆனார்.
வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய குணதிலகா மூன்று போட்டிகளில் 43 ரன் (சராசரி 14.33) மட்டுமே அடித்தார். சாம்பியன்ஸ் டிராபிக்கான இலங்கை அணியின் காத்திருப்பு வீரர்களில் அவரும் ஒருவர்.
முதல் போட்டியில் பேட்டிங் சொதப்பியதால் தோல்வி பெற்றோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக வெல்ல வேண்டும் என மத்தியூஸ் கூறினார்.